ஆப்நகரம்

16 கோடி வாடிக்கையாளர்கள்! லாபம் பார்க்கத் தொடங்கியது ஜியோ

16.1 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் லாபம் பெறும் நிலைக்கு முன்னேறியுள்ளது.

Samayam Tamil 20 Jan 2018, 1:25 pm
16.1 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் லாபம் பெறும் நிலைக்கு முன்னேறியுள்ளது.
Samayam Tamil jio turns profitable user base hits 160 1 million
16 கோடி வாடிக்கையாளர்கள்! லாபம் பார்க்கத் தொடங்கியது ஜியோ


ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவையில் தொடங்கி தற்போது குறைந்த விலையில் 4G டேட்டா, இலவச வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் போன்றவற்றை அளித்து வருகிறது. இத்துடன் ஜியோ போன் விற்பனையிலும் சாதித்துள்ள அந்நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது.

ஜியோவின் வருகைக்குப் பின் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அட்டகாசமான சலுகைகளை குறைந்த விலையில் அளிக்கத் தொடங்கிவிட்டன.

ஆனால், 2016ஆம் ஆண்டு அக்கோடபரில் ஜியோ வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ரூ.271 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜியோ வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் 2017-18ஆம் நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கன அறிக்கையில், அந்நிறுவனத்தில் 16.1 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்றும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் தொடங்கப்பட்ட 18 மாதங்களுக்குப் பின் லாபம் பெறும் நிலையை அடைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாடிக்கையாளர் மூலம் மாதம் தோறும் ரூ.154 லாபம் கிடைப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது!

அடுத்த செய்தி

டிரெண்டிங்