ஆப்நகரம்

Lava Pulse 1 : வெறும் ரூ.1,999-க்கு அறிமுகம்; அம்சங்களை சொன்னா நம்புவீங்களா?

சில சுவாரசியமான அம்சங்களுடன், லாவா நிறுவனத்தின் சமீபத்திய பீச்சர் போனாக லாவா பல்ஸ் 1 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 27 Oct 2020, 6:26 pm
லாவா நிறுவனம் இன்று தனது சமீபத்திய பீச்சர் போன் ஆன லாவா பல்ஸ் 1 மாடலை அறிமுகம் செய்துள்ளது, இது ஒரு உள்ளமைக்கப்பட்ட காண்டாக்ட்லெஸ் வெப்பமானியுடன் (contactless thermometer) வருகிறது.
Samayam Tamil Lava Pulse 1 Price and Specs


எந்த ரெட்மி மொபைல் மீது அதிகப்பட்ச தீபாவளி ஆபர் கிடைக்குது? இதோ முழு லிஸ்ட்!

இந்த பீச்சர் போனின் விலை ரூ.1999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ரோஸ் கோல்ட் வண்ணத்தில் விற்பனைக்கு வரும். இந்த லேட்டஸ்ட் லாவா போன் ஆன்லைனில் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் நாட்டின் 100 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை கடைகளின் வழியாக வாங்க கிடைக்கிறது.

கேலக்ஸி S20 FE மீது ரூ.9,000 ஆபர்; சாம்சங்கின் தெறிக்கவிடும் தீபாவளி சலுகை!

லாவா பல்ஸ் 1 ஸ்மார்ட்போன் ஆனது சென்சாரைத் தொடாமலேயே பயனர்கள் தங்கள் உடல் வெப்பநிலையை அளவிட உதவுகிறது. பயனர்கள் தங்கள் கையின் பின்புறம் அல்லது நெற்றியை சென்சாரிலிருந்து சில சென்டிமீட்டர் தொலைவில் வைக்க வேண்டும், அது உடனடியாக அவர்களின் உடல் வெப்பநிலையை ஸ்க்ரீனில் காண்பிக்கும்.

லாவா பல்ஸ் 1 ஸ்மார்ட்போன் "துணிவுமிக்க" பாலிகார்பனேட் உடலைக் கொண்டுள்ளது மற்றும் 2.4 இன்ச் அளவிலான டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த மொபைல் போன் 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது.

இது சூப்பர் பேட்டரி பயன்முறையுடன் ஆதரிக்கப்படும் 1800 mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது சிங்கிள் 100% சார்ஜில் 6 நாட்கள் வரை நீடிக்கும் பேட்டரி ஆயுளை வழங்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மிலிட்டரி கிரேடு சான்றளிக்கப்பட்டதாகும், இதன் பொருள் பயனர்கள் சிறிய காய் தவறல்களை மற்றும் கீழ் விழுதல்களை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று அர்த்தம். கூடுதலாக, இந்த போன் 1 ஆண்டு மாற்று சேவை உறுதிமொழியுடன் வருகிறது.

லாவா பல்ஸ் 1 மொபைல் போன் ஆனது நம்பர் டாக்கர், தொடர்புகளைச் சேமிப்பதற்கான போட்டோ ஜகான்ஸ், ரெக்கார்டிங் கொண்ட வயர்லெஸ் எஃப்எம் மற்றும் டூயல் சிம் ஆதரவு போன்ற சில கவனிக்க வேண்டிய மற்றும் விலையை மீறிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

இந்த போன் ஆட்டோ கால் ரெக்கார்டிங் செய்வதற்கான ஏற்பாட்டை வழங்குகிறது மற்றும் பயனர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு, குஜராத்தி மற்றும் பஞ்சாபி உள்ளிட்ட 7 மொழிகளில் டைப் செய்யவும் உதவுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்