ஆப்நகரம்

செம ஆளுபா சயாமி; 'ஐபோன் X'ஐ அப்படியே காப்பியடிச்சு 'மி மிக்ஸ் 2s' வருது!

ஐபோனின் புதிய பதிப்பை காப்பியடித்து, மி மிக்ஸ் 2s ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TNN 9 Nov 2017, 4:50 pm
டெல்லி: ஐபோனின் புதிய பதிப்பை காப்பியடித்து, மி மிக்ஸ் 2s ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil leaked images of the mi mix 2s shows iphone x like notch
செம ஆளுபா சயாமி; 'ஐபோன் X'ஐ அப்படியே காப்பியடிச்சு 'மி மிக்ஸ் 2s' வருது!


ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான 'ஐபோன் X' விற்பனைக்கு வந்துள்ளது. அதன் வடிவமைப்பை காப்பியடிப்பதில், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அச்சம் கொள்ளவில்லை. அதற்கு சயாமி நிறுவனமும் விலக்கல்ல.

இந்நிலையில் ஐபோனின் டிசைனை அப்படியே காப்பியடித்து, 'மி மிக்ஸ் 2s' ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. மிகப்பெரிய ஸ்கிரீனைக் கொண்டு, அனைவரையும் வசீகரிக்கும் ஸ்மார்ட்போனாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’மி மிக்ஸ் 2’ ஸ்மார்ட்போன், முந்தைய போனைப் போன்றே வடிவமைப்பை கொண்டுள்ளது. மிகச்சிறந்த கேமராவுடன், அதிவேக செயல்பாட்டையும் கொண்டுள்ளது.

ஆனால் அதில் ஆப்பிள் நிறுவன ஐபோனின் சாயல் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. சமீபத்தில் 'ஐபோன் X' போன்று புதிய வெளியீட்டைக் கொண்டு வருவது தெரியவந்துள்ளது.

இதன் முக்கிய அம்சங்களாக 6 ஜிபி ரேம், குவால்கம் 835 சிப்செட், 12- மெகாபிக்சல் கேமரா சென்சார் திகழ்கிறது.

Leaked Images Of The Mi Mix 2s Shows iPhone X-Like Notch.

அடுத்த செய்தி

டிரெண்டிங்