ஆப்நகரம்

இந்தியாவில் 2 எல்ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்; ஒன்று பட்ஜெட், மற்றொன்று பிரீமியம்!

எல்ஜி நிறுவனம் இந்தியாவில் அதன் டபுள்யூ தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த பின்னர் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் விற்பனைக்கு திறந்து விட்டுள்ளது.

Samayam Tamil 1 Oct 2019, 5:42 pm
எல்ஜி நிறுவனம் அதன் டபிள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன்களான எல்ஜி டபிள்யூ 10, எல்ஜி டபிள்யூ 30 மற்றும் எல்ஜி டபிள்யூ 30 ப்ரோ ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்திய பின்னர், தற்போது மேலும் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை - LG G8s ThinQ மற்றும் LG Q60 - அறிமுகப்படுத்தியுள்ளது.
Samayam Tamil LG G8s ThinQ Price


பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன எல்ஜி க்யூ60 ஆனது ரூ.13,490 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. இது அக்டோபர் 1 ஆம் தேதி முதல் (அதாவது இன்று முதல்) இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

மறுகையில் உள்ள பிரீமியம் ஸ்மார்ட்போன் ஆன எல்ஜி ஜி8எஸ் தின்க் ஆனது ரூ.36,990 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது, இது செப்டம்பர் 29 முதலே அதாஹ்ன் கருப்பு வண்ண வேறுபாட்டின் கீழ் அதன் இந்திய விற்பனையை தொடங்கிவிட்டது.

எல்ஜி ஜி8எஸ் தின்க் - டிஸ்பிளே:

முதலில் எல்ஜி ஜி8எஸ் தின்க் பற்றி பேசலாம். இது 6.2 இன்ச் அளவிலான எஃப்எச்.டி+ ஓஎல்இடி ஃபுல்விஷன் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது அது 18.7: 9 அளவிலான திரை விகிதம், 2248 x 1080 அளவிலான பிக்சல்கள் மற்றும் 2.5 டி கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு ஆகியவைகளை கொண்டு வருகிறது.

OnePlus 7T vs OnePlus 7: என்னென்ன ஒற்றுமைகள்? என்னென்ன வித்தியாசங்கள்?

ப்ராசஸர் & மெமரி:

இந்த புதிய ஸ்மார்ட்போன் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் உடனான 6 ஜிபி ரேம் + 128 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பகத்தின் கீழ் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் Android 9.0 Pie கொண்டு இயங்குகிறது.

ரியர் கேமரா:

கேமராத்துறையை பொருத்தவரை, எல்ஜி ஜி8எஸ் தின்க் ஆனது 13 எம்பி சூப்பர் வைட் ஆங்கிள் லென்ஸ் + 12 எம்பி ஸ்டாண்டர்ட் லென்ஸ் + 12 எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவற்றைக் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

செல்பீ கேமரா:

முன்பக்கத்தில், இரட்டை கேமரா அமைப்பை பெற்றுள்ளது. ஒன்று 8எம்பி அளவிலான ஸ்டாண்டர்ட் லென்ஸ் மற்றொன்று ToF sensor அல்லது Z camera என்று அழைக்கப்படுகிறது. ஃபேஸ் அன்லாக்கை நிகழ்த்த இதன் இசட் கேமரா பயன்படுத்தப்படுகிறது.

WhatsApp Alert: நிறுத்தப்படுகிறது வாட்ஸ்ஆப் சேவை! எப்போது முதல்? எந்தெந்த ஸ்மார்ட்போன்களில்?

சென்சார்கள்:

எல்ஜி நிறுவனம் இதில் அதன் ஹேண்ட் ஐடி அம்சத்தினை இணைத்துள்ளது. அதாவது அகச்சிவப்பு ஒளியைப் பயன்படுத்தி ஒருவரின் கையில் உள்ள தனித்துவமான சுற்றோட்ட வடிவத்தை ஸ்கேன் செய்வதன் மூலம் ஸ்மார்ட்போனை அன்லாக் செய்யலாம். இந்த ஸ்மார்ட்போனில் fingerprint unlocking தொழில்நுட்பமும் உள்ளது.

பேட்டரித்திறன்:

எல்ஜி ஜி8எஸ் தின்க் ஆனது 3550 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது, மேலும் இது க்வால்காம் க்விக் சார்ஜி 3.0 தொழில்நுட்பத்திற்கான ஆதரவையும் கொண்டுள்ளது.

எல்ஜி கியூ60 அம்சங்கள்:

மறுகையில் உள்ள எல்ஜி கியூ60 ஆனது 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மூலம் இயக்கப்படுகிறது. இது 3 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டர்னல் மெமரியுடன் வருகிறது, இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 2 டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யும் ஆதரவையும் வழங்குகிறது.

iOne Note: சீன ஸ்மார்ட்போன்களால் மட்டும் தான் முடியுமா? கலக்கும் இந்திய நிறுவனம்!

இயங்குதளம் & கேமரா:

இது ஆண்ட்ராய்டு 9.0 பை மூலம் இயக்கப்படுகிறது. கேமராவை பொறுத்தவரை, இது 16MP ஸ்டாண்டர்ட் லென்ஸ் + 2MP ஆழம் சென்சார் + 5MP சூப்பர் வைட் ஆங்கிள் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், ஒரு 13 எம்.பி அளவிலான செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

பேட்டரி & வண்ண விருப்பம்:

பேட்டரியைப் பொருத்தவரை, எல்ஜி கியூ60 ஆனது ஒரு 3500 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது, இது மொராக்கோ ப்ளூ கலர் வேரியண்ட்டில் இந்தியாவில் வாங்க கிடைக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்