ஆப்நகரம்

ட்ரிபிள் ஸ்க்ரீனை தொடர்ந்து 5G Dual Screen ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் எல்ஜி! எப்போது?

முன்னதாக, எல்ஜி அதன் ட்ரிபிள் ஸ்க்ரீன் ஸ்மார்ட்போனின் டீஸரை வெளியிட்டது.

Samayam Tamil 13 Aug 2019, 6:52 pm
எல்ஜி நிறுவனம் தனது வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் டீஸர் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளது. அந்த டீசர், நிறுவனத்தின் டூயல் ஸ்க்ரீன் ஸ்மார்ட்போனை வெளிப்படுத்தி உள்ளது. கூறப்படும் டூயல் ஸ்க்ரீன் ஸ்மார்ட்போன் ஆனது LG V50 ThinQ ஸ்மார்ட்போனின் மேம்பட்ட பதிப்பாக இருக்கலாம் என்றும், அது LG V60 அல்லது LG V60 ThinQ என்று அழைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil LG dual screen smartphone


சரியான பெயர் மற்றும் துல்லியமான அம்சங்களை அறிய, அதிகாரபூர்வ அறிவிப்பு நாளான செப்டம்பர் 6 வரை நாம் காத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. 5ஜி ஆதரவுடன் அறிமுகமாகும் எல்ஜி நிறுவனத்தின் டூயல் ஸ்க்ரீன் ஸ்மார்ட்போனை பற்றிய கூடுதல் விவரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்.

வீடியோவின் வழியாக வியூகம்!

எல்ஜி நிறுவனம் தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பதிவியேற்றியுள்ள 15 வினாடிகள் நீளும் டீஸர் வீடியோ ஆனது ““Dual, the Better" என்கிற தலைப்பை சுமந்துள்ளது. வீடியோவில் ஒரு அனிமேஷன் கடிகாரம் ஆனது ஆறு மணியில் இருந்து பன்னிரெண்டு மணிக்கு நகரும்படி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஸ்மார்ட்போனின் இரண்டாவது ஸ்க்ரீன் ஆனது 104 டிகிரி அல்லது 180 டிகிரியில் நிலைநிறுத்தக்கூடும் என்பதை அது குறிக்கிறது. முடிவில், 6 செப்டம்பர் 2019 மற்றும் காலை 10 என்று காட்டுகிறது, இது ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்கள் ஆகும்.

Triple Screen Smartphone: மாயாஜாலம் காட்டும் எல்ஜி ட்ரிபிள் ஸ்க்ரீன் ஸ்மார்ட்போனின் ட்ரெய்லர் இதோ!

ஒரு லேப்டாப்பை போல!

யோன்ஹாப் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, வெளியாகும் புதிய எல்ஜி ஸ்மார்ட்போனில் “Free Stop Hinge" தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம். அதாவது ஒரு லேப்டாப்பை போல, ஸ்மார்ட்போனின் இரண்டாவது ஸ்க்ரீனை எந்த கோணத்திலும் நிலைநிறுத்தப்படலாம் என்று அர்த்தம். இது தவிர்த்து வெளியாகப்போகும் எல்ஜி ஸ்மார்ட்போனை பற்றிய வேறெந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

Realme 3i: இன்று முதல் இந்திய விற்பனையை தொடங்கும் ரியல்மி 3ஐ: விலை & அம்சங்கள்!

ஐ.எஃப்.ஏ 2019!

எல்ஜி நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் ஜெர்மனியின் பெர்லினில் நிகழும் ஐ.எஃப்.ஏ 2019-இல் வெளியிடப்பட உள்ளது. ஐ.எஃப்.ஏ என்பது ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப வர்த்தக கண்காட்சி ஆகும் என்பதும், இது வருகிற 2019 செப்டம்பர் 6 முதல் 11 வரை நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்