ஆப்நகரம்

மோட்டோ ரசிகர்களே.. மே 21 வரை எந்த போனும் ஆர்டர் பண்ணிறாதீங்க!

மோட்டோ ஜி 8 பவர் லைட்டை இந்தியாவில் மே 21 அன்று அறிமுகமாகிறது. முழு அம்சங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை விவரம், இதோ!

Samayam Tamil 18 May 2020, 8:05 pm
மோட்டோரோலா நிறுவனம் அதன் மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் மே 21 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. மோட்டோரோலா நிறுவனம் அதன் எட்ஜ்+ ஸ்மார்ட்போன் இந்தியாவில் மே 19 ஆம் தேதி அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
Samayam Tamil Moto G8 Power Lite


மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை நிறுவனம் அறிவிக்கவில்லை என்றாலும், அதன் இந்திய வெளியீட்டு தேதியை பிளிப்கார்ட் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த மாதம் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் 5,000 எம்ஏஎச் பேட்டரி, 6.5 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் ட்ரிபிள் ரியர் கேமராக்கள் போன பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A11 மற்றும் A41: அட.. எதிர்பார்த்ததை விட கம்மி விலை!

மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போனின் (எதிர்பார்க்கப்படும்) விலை:

மோட்டோரோலா மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன் ஆனது 169 யூரோ என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. அதாவது இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.13,870 ஆகும். இது பிளிப்கார்ட் வழியாக வாங்குவதற்கு கிடைக்கும்.

விற்பனை சலுகைகள் அல்லது வெளியீட்டு தேதி உட்பட வேறு எந்த விவரங்களையும் ஈ-காமர்ஸ் வெளியிடவில்லை. இந்த புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன் ராயல் ப்ளூ மற்றும் ஆர்க்டிக் ப்ளூ ஆகிய வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும்.

ரூ.14,999 க்கு வேற என்ன வேணும்? 24MP க்வாட் கேம் உடன் நோக்கியா 6.3!

மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

மேலே குறிப்பிட்டுள்ளபடி, மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு பை கொண்டு இயங்குகிறது மற்றும் 6.5 இன்ச் அளவிலான (729x1600 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவை வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் வடிவமைப்பின் கீழ் பெற்றுள்ளது. மேலும் இது 20: 9 விகித விகிதம் மற்றும் 269 பிபி பிக்சல் அடர்த்தி ஆகியவற்றை வழங்குகிறது.

இது 4 ஜிபி ரேம் உடன் ஜோடியாக 2.3GHz மீடியாடெக் ஹீலியோ பி 35 SoC ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இதன் இன்டர்னல் மெமரி 64 ஜிபி ஆகும்.உடன் மைக்ரோ டி கார்டைப் பயன்படுத்தி 256 ஜிபி வரை நீடிக்கலாம்.

கேமரத்துறையை பொறுத்தவரை, இது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அதில் 16 மெகாபிக்சல் மெயின் ஸ்னாப்பர் (எஃப் / 2.0, பி.டி.ஏ.எஃப்) + 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் (எஃப் / 2.4) + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் (எஃப் / 2.4) ஆழஆகியவைகளை கொண்டுள்ளது.

பிரபலமான 2 பட்ஜெட் போன்களின் விலை உயர்வு; ரியல்மி இப்படி செஞ்சிருக்க கூடாது!

இது எச்டிஆர், பியூட்டி மோட், டூயல் கேமரா ப்ளர் எபெக்ட், டைமர், பனோரமா, கூகுள் லென்ஸ் ஒருங்கிணைப்பு போன்ற கேமரா அம்சங்களையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் ஒரு 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா (எஃப் / 2.0) உள்ளது.

மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போனின் இந்த மொத்த அமைப்பும் 5,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது 10W சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. நிறுவனத்தின்படி இது 19 மணிநேர வீடியோ பிளேபேக் மற்றும் 100 மணிநேர ஆடியோ பிளேபேக் வரை நீடிக்கும்.

இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4ஜி எல்டிஇ, மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், ப்ளூடூத் வி 4.2, வைஃபை 802.11 பி / ஜி / என், ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ் மற்றும் க்ளோனாஸ் ஆகியவைகளை கொண்டுள்ளது. அளவீட்டில் இது 164.94x75.76x9.2 மிமீ மற்றும் சுமார் 200 கிராம் எடையையும் கொண்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் அங்கீகாரத்திற்கான கைரேகை சென்சார் பின்புறத்தில் உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்