ஆப்நகரம்

Netflix அறிவித்துள்ள "தரமான" இலவச சேவை; அதுவும் YouTube வழியாக!

Netflix நிறுவனம் அதன் பல Documentary Features மற்றும் Series-களை இலவசமாக வெளியிட்டுள்ளது. எங்கே?

Samayam Tamil 18 Apr 2020, 5:03 pm
ஆசிரியர்களின் வேண்டுகோளின்படி நிறுவனத்தின் யூடியூப் சேனலில் Our Planet and Explained உள்ளிட்ட சில டாக்குமெண்டரி பீச்சர் மற்றும் சீரீஸ்களை இலவசமாக கிடைக்கச் செய்துள்ளதாக நெட்பிலிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil Netflix free offer


கொரோனா வைரஸ் பரவல் விளைவாக அறிவிக்கப்பட்டுள்ள லாக்டவுன் ஆனது கல்வி நிறுவனங்களை மூடுமாறு கட்டாயப்படுத்தியதோடு, மில்லியன் கணக்கான மாணவர்களை தங்கள் வீடுகளில் அடைத்து வைத்தது. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரி வகுப்புகளை மெய்நிகர் கருவிகள் (virtual tools) வழியாக இயங்க செய்கிறது.

யூடியூப்பில் சில உள்ளடக்கங்களை இலவசமாக்குவதற்கான நெட்ஃபிக்ஸ் நிறுவனத்தின் இந்த முடிவு, அதன் மார்க்கெட்டிங் உத்திக்கான ஒரு அரிய விதிவிலக்காகும். ஏனெனில் நெட்பிலிக்ஸ் எப்போதுமே அதன் சேவைகளை வழங்க மாதாந்திர சந்தா கட்டணத்தை வசூலிக்கும் பழக்கத்தினை கொண்டது.

கோவிட்-19 லாக்டவுன் நாட்கள் அனைத்து இணைய பயன்பாட்டை வேறொரு இமய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இதன் விளைவாக நெட்பிலிக்ஸ் அதன் பங்குகளை உயர்த்திய நிலையில், ஆப்பிள் டிவி+ மற்றும் டிஸ்னி+ ஆகியவற்றிலிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது, இது இரண்டும் உலகளவில் 50 மில்லியனுக்கும் அதிகமான கட்டண பயனர்களை ஈர்த்துள்ளது.

'ஆவணப்படங்களை அணுகுவதற்கான ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்தல்' என்ற தலைப்பி ன் கீழ் "பல ஆண்டுகளாக, நெட்பிலிக்ஸ் நிறுவனம் ஆசிரியர்களை தங்கள் வகுப்பறைகளில் ஆவணப்படங்களை திரையிட அனுமதித்துள்ளது. இருப்பினும், பள்ளிகள் மூடப்பட்டதால் இது சாத்தியமில்லை."

"எனவே அவர்களின் வேண்டுகோளின் பேரில், Netflix US YouTube சேனலில் எங்கள் டாக்குமெண்டரி பீச்சர் மற்றும் தொடர்கள் இலவசமாக அணுக கிடைக்கும்படி நாங்கள் செய்துள்ளோம்" என்று நெட்பிலிக்ஸ் நிறுவனம் வலைப்பதிவு வழியாக அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்