ஆப்நகரம்

செல்போன் எண்13 இலக்க எண்ணாக மாறாது; பதட்டம் வேண்டாம்!!

நாட்டில் அனைத்து செல்போன் எண்களும் 10 இலக்க எண்ணில் இருந்து 13 இலக்க எண்ணாக மாற இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தியில் உண்மை இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 21 Feb 2018, 3:14 pm
நாட்டில் அனைத்து செல்போன் எண்களும் 10 இலக்க எண்ணில் இருந்து 13 இலக்க எண்ணாக மாற இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தியில் உண்மை இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil no your mobile number will not have 13 digits
செல்போன் எண்13 இலக்க எண்ணாக மாறாது; பதட்டம் வேண்டாம்!!


நாட்டில் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அனைத்து செல்போன்களின் இலக்க எண்கள் 10ல் இருந்து 13ஆக மாற இருப்பதாக தகவல் வெளியாகி, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் உண்மை இல்லை என்பாத்து உறுதியாகியுள்ளது.

ஸ்வைப் மெஷின், கார், மின் மீட்டர்கள் ஆகியவற்றில் பயன்படுத்தும் சிம் கார்டுகளில் எம்2 எம் என்ற எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எண்கள்தான் 13 இலக்க எண்களாக மாற இருப்பதாக கூறப்படுகிறது. இதை தொலைபேசி நிறுவனங்களான பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் கழகம் ஆகியவை டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் உறுதிபடுத்தியுள்ளன. எம்2எம் சிம் எண்கள் மாறும்போது அது எந்த வகையிலும் செல்போன் எண்களை பாதிக்காது என்று உறுதிபடுத்தியுள்ளனர்.

இந்த 13 எண் மாற்றம் என்பது எம்2எம் தொடர்புக்குத்தான் என்று இந்த மாதத்தின் துவக்கத்தில் தொலை தொடர்புத்துறை தொலைபேசி நிறுவனங்களுக்கு தெரிவித்து இருந்தது.

மேலும் தொலை தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ள செய்தியில், வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் 13 இலக்க எண்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அக்டோபர் 1ஆம் தேதி எம்2எம்-ன் அனைத்து எண்களும் 13 இலக்கமாக மாறும். இந்தப் பணி டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடையும்.

எம்2எம் என்பது வெவ்வேறு இடங்களில் இருந்து வயர்லஸ் மூலம் பேசும்போது உதவுகிறது. போக்குவரத்து மேலாணமை தீர்வு, வாகன தணிக்கை, மின்சார மீட்டர்கள் போன்றவற்றில் பயன்படுத்துவதற்கு இந்த எண் சேவையை தொலை தொடர்பு நிறுவனங்கள் ஒதுக்குவதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்