ஆப்நகரம்

வாவ்.. பின்பக்கத்தில் மட்டும் 5 கேமரா! நோக்கியாவின் புது ஸ்மார்ட்போன்!!

நோக்கியா நிறுவனம் தற்போது 5 கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விபரங்களை இங்கு காணலாம்.

Samayam Tamil 10 Jul 2019, 4:46 pm
நோக்கியா நிறுவனம் 9ப்யூர் வியூ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஸ்னாப்டிராகன 845 பிராசசர், பிளாக்ஷிப், பெண்டா கேமரா உள்ளிட்ட வசதிகள் உள்ளது.
Samayam Tamil nokia 9 pureview


கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில், நோக்கியா 9 ப்யூர் வியூ ஸ்மார்ட்போன் பற்றி அறிவிக்கப்பட்டது. இதில் பின்பக்கத்தில் பெண்டா கேமரா உள்ளதாக தகவல் வந்ததையடுத்து, வாடிக்கையாளர்களுக்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. பெண்டா கேமரா என்றால் ஐந்து கேமரா என்பதாகும்.

இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நோக்கியா 9 ப்யூர் வியூ ஸ்மார்ட்போன் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை 49,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் nokia.com மற்றும் flipkart.com ஆன்லைன் ஷாப்பிங்கில் நோக்கியா 9 ப்யூர் வியூ போனை வாடிக்கையாளர்கள் வாங்கலாம். தற்சமயம் ஆன்லைனில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. வரும் 17ம் தேதிக்குப் பிறகு மற்ற மொபைல் ஷோரூம்களிலும் கிடைக்கும்.

தொடக்க விற்பனையாக வாடிக்கையாளர்களுக்கு சில ஆஃபர்கள், ப்ரோமொ கோட் வழங்கப்படுகிறது. மேலும், HDFC வங்கியின் கிரெடிட்/டெபிட் கார்டு மூலம் நோக்கியா போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், 9,999 ரூபாய் மதிப்புள்ள நோக்கியா 705 இயர் பட்ஸ், 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கிப்ட் கார்டு ஆகியவையும் வழங்கப்படுகிறது.

நோக்கியா 9 ப்யூர் வியூ ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பம்சங்கள்:
பிராசசர்: ஸ்னாப்டிராகன் 845 சிப்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
பேட்டரி சக்தி: 3,320 mAh
பிளாக்ஷிப் ஸ்போர்ட்ஸ்
திரை அளவு: 5.99 இன்ச்
டிஸ்ப்ளே: 2K POLED
HDR 10 சப்போர்ட்
விரல் ரேகை சென்சார்
வயர்லஸ் சார்ஜிங்
சார்ஜர்: 18W ஃபாஸ்ட் சார்ஜர்
சிறப்பம்சம்: பெண்டா கேமரா

அடுத்த செய்தி

டிரெண்டிங்