ஆப்நகரம்

ஓபன் சேல் வந்த Samsung M40 ஸ்மார்ட்போன்: இனி எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம்!

சாம்சங் எம்40 ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளும் வகையில், ஓபன் சேலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது

Samayam Tamil 25 Jun 2019, 4:18 pm
இதுவரையில் பிளாஷ் சேலில் மட்டுமே விற்கப்பட்டு வந்த சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன், தற்போது ஓபன் சேலாக வந்துள்ளது. இதனால், எப்போது வேண்டுமானாலும் இந்த ஸ்மார்டபோனை வாங்கிக்கொள்ளலாம்.
Samayam Tamil samsung m40


சாம்சங் என்றாலே நடுத்தர மக்களின் நாயகன் தான். பட்ஜெட் விலையில் சாதாரண மக்களுக்கும் பயன்படும் வகையில், பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டதாக சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின்றன. நீடித்து நிற்கும் பேட்டரி, வாரண்டி, மிக எளிதான ஆப்ஷன்கள், யூசர் ப்ரெண்ட்லியாக சாம்சங் ஸ்மார்ட்போன்கள் உள்ளது.. அண்மையில் அறிமுகமாகன சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.

அந்தவகையில், தற்போது சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்40 என்ற ஸ்மார்ட்போனை தயாரித்துள்ளது. எம் சீரிஸ் வரிசையில் இது நான்காவது ஸ்மார்ட்போனாகும்.. இதில் 6ஜிபி ரேம், குவால்காம் கோர், 512 ஜிபி மெமரி, 32 மெகா பிக்சல் ட்ரிப்பிள் கேமரா, 3500 mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது 19,990 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் சாம்சங் எம்40 ஸ்மார்ட்போன் ஃபிளாஸ்சேல் (Flash Sale) விற்பனையில் மட்டும் தான் விற்கப்பட்டு வந்தது. குறிப்பிட்ட சில நாளில் சரியாக மதியம் 12 மணிக்கு விற்பனை தொடங்கும். ஆனால், அடுத்த சில விநாடிகளிலேயே விற்று தீர்ந்து விடும். இதனால், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் சாம்சங் எம்40 ஸ்மார்ட்போனை வாங்க முடியாமல் பரிதவித்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது சாம்சங் எம்40 ஸ்மார்ட்போன் ஓபன் சேலுக்கு வந்துள்ளது. இதனால், இனி 24x7 எப்போதும் ஆன்லைனில் விற்பனைக்கு கிடைக்கும். வாடிக்கையாளர்கள் எப்போது வேண்டுமானாலும், அமேசான் மற்றும் சாம்சங் ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்கிக் கொள்ளலாம்.

Punch Hole Display
சாம்சங் எம்40 ஸ்மார்ட்போனில் மிகமுக்கிய சிறப்பம்சமாக பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே உள்ளது. Punch Hole Display என்பது போனின் மேல் முனையில் ஒரு துளையிடப்பட்டிருக்கும். அதை அளவு குறியாகக் கொண்டு, நோட்ச் டிஸ்ப்ளே, நார்மல் டிஸ்ப்ளே என போனின் டிஸ்ப்ளேவை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு முன்னதாக கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் இது இருந்திருக்கும். இதே போல், எம் சீரிஸ் வரிசையில், முதன்முதலாக இந்த ஸ்மார்ட்போனில் தான் ஸ்நாப்டிராகன் பிராசசர் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடிப்படை சிறப்பம்சங்கள்:
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
திரை அளவு: 6.3 இன்ச்
டிஸ்ப்ளே: Full Hd Infinity-O display
பிராசசர்: ஆக்டா கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 675 SoC
ரேம்: 6ஜிபி
மெமரி: 128 ஜிபி
எக்ஸ்பேண்டபிள் மெமரி: 512 ஜிபி
கேமரா: ட்ரிப்பிள் கேமரா
பின்புற கேமரா: 32+5+8 மெகா பிக்சல்
செல்பி கேமரா: 8 மெகாக பிக்சல்
பேட்டரி: 3,500 mAh
சார்ஜர்: 15W அதிவேக சார்ஜர்

அடுத்த செய்தி

டிரெண்டிங்