ஆப்நகரம்

மிகமிக குறைந்த விலையில் OnePlus 6T ஸ்மார்ட்போன்! மிஸ் பண்ணிடாதீங்க

அமேசான் நிறுவனம் வாடிக்கையார்களை குஷிபடுத்தும் வகையில், Fab Phone Fest என்ற பெயரில் அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது. இதில் 8ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போனின் விலை இதுவரையில் இல்லாத அளவில் குறைக்கப்பட்டள்ளது.

Samayam Tamil 9 Jun 2019, 2:13 pm
அமேசான் நிறுவனம் வாடிக்கையார்களை குஷிபடுத்தும் வகையில், Fab Phone Fest என்ற பெயரில் அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது. இதில் 8ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போனின் விலை இதுவரையில் இல்லாத அளவில் குறைக்கப்பட்டள்ளது.
Samayam Tamil oneplus 6t


வர்த்தக உலகில் போட்டிகளை சமாளிக்கும் வகையில், அமேசான் நிறுவனம் அவ்வபோது ஆஃபர்களை அறிவித்து வருகிறது. இது போக குறிபிட்ட வீட்டு உபயோகப்பொருட்கள், கேட்ஜெட்களுக்கும் தள்ளுபடி சலுகை வழங்கி வருகிறது.

இந்நிலையில், Fab Phone Fest என்ற பெயரில் தற்போது அமேசான் நிறுவனம் தள்ளுபடி விலையில் விற்பனை, ஸ்மார்ட்போன் எக்ஸ்சேஞ்ச் உள்ளிட்ட ஆஃபர்களை அறிவித்துள்ளது. இந்த ஆஃபர் விற்பனை நாளை முதல் தொடங்குகிறது. இதில் எண்ணற்ற பொருட்களுக்கு ஆஃபர்கள் இருந்தாலும், அவற்றில் குறிப்பிடும் வகையில், ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போனுக்கு வெறும் 27,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் அசல் விலை 41,999 ரூபாய் ஆகும்.

இது தவிர குறிப்பிட்ட வங்கியின் டெபிட்/கிரேடிட் கார்டு மூலம் ஒன்பிளஸ் போனை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட சதவீதம் வரையில் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

OnePlus 6T இல் உள்ள அடிப்படை சிறப்பம்சங்கள்:
ஆப்ரேட்டிங் சிஸ்டம்: OxygenOS
ஆண்ட்ராய்டு: Android 9.0 Pie
டிஸ்ப்ளே அளவு: 6.28 இன்ச்
ரேம்: 8 ஜிபி
இன்பீல்ட் மெமரி: 256 ஜிபி
கேமரா: டூயல் கேமரா
முன்புற கேமரா: 16 மெகா பிக்சல்
பின்புற கேமரா: 20 மெகா பிக்சல்
பேட்டரி சக்தி: 3,700 mAh, 20 வாட் அதிகவேக சார்ஜ் செய்யும் வசதி

அடுத்த செய்தி

டிரெண்டிங்