ஆப்நகரம்

OnePlus 5G Smartphone: இந்தியர்களே 700Mbps வேகத்திற்கு தயாராகி கொள்ளுங்கள்! எப்போது முதல்?

இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் இரண்டாவது 5ஜி ஸ்மார்ட்போன் மற்றும் இந்தியாவிற்கான முதல் 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும்.

Samayam Tamil 16 Aug 2019, 4:28 pm
2019 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாகவும், இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது அமெரிக்க சந்தை உட்பட அனைத்து சந்தைகளிலும் கிடைக்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
Samayam Tamil Oneplus 5G Smartphone India Launch


ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் 7 ப்ரோ 5ஜி, கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆக அடுத்த 5ஜி ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போனாக வெளியாகப்போவது - ஒன்பிளஸ் 7டி ப்ரோவாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரீமியம் ஸ்மார்ட்போன்!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பீட் லாவ் கூற்றின்படி, 2019 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் இரண்டாவது 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகும். இம்முறை இந்த ஸ்மார்ட்போன் உலகளவில் அறிமுகப்படுத்தப்படும். மேலும் அவர் கூறுகையில், "நீங்கள் 2020 ஆம் ஆண்டில் பிரீமியம் ஸ்மார்ட்போன் ஒன்றை வைத்திருக்க விரும்பினால், அது 5ஜி தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.

நான்கு பின்புற கேமராக்களை கொண்ட ஒப்போ ரெனோ 2; ஆகஸ்ட் 28-ல் இந்திய அறிமுகம்!

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்!

இது தவிர்த்து வரவிருக்கும் ஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனை பற்றிய வேறெந்த தகவலும் வெளியாகவில்லை. லீக்ஸ் தகவல்கள் கூட மிகவும் குறைவாகவே உள்ளன. இருப்பினும், ஒன்ப்ளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போனில், க்வால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் SoC, ஃபுல் ஸ்க்ரீன் நாட்ச-லெஸ் டிஸ்பிளே, மூன்று பின்புற கேமரா அமைப்பு, பெரும்பாலும் பாப்-அப் செல்பீ கேமரா போன்ற பிரதான அம்சங்களை எதிர்பார்க்கலாம்.

iPhone 11 Launch Date: என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? எப்போது வெளியாகும்?

தெளிவான முன்னிலையில் ஒன்பிளஸ் 5ஜி வேகம்!

ரூட்மெட்ரிக்ஸ் நடத்திய சமீபத்திய சோதனையின்படி, ஒன்பிளஸ் 7 ப்ரோ 5ஜி கிட்டத்தட்ட 700 எம்.பி.பி.எஸ் அளவிலான பதிவிறக்க வேகத்தை அடைந்துள்ளது. இது மற்ற ஸ்மார்ட்போன்களை விட தெளிவான முன்னிலையை வெளிப்படுத்துகிறது. ஒப்பிடுகையில், சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி ஆனது 550 எம்.பி.பி.எஸ் அளவிலான வேகத்தை மட்டுமே வழங்க, எல்ஜி வி50 5ஜி மற்றும் ஒப்போ ரெனோ 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்கள் 600 எம்.பி.பி.எஸ் அளவிலான வேகத்தை வழங்குகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்