ஆப்நகரம்

OnePlus TV: செப். 26 வெளியீட்டுக்கு முன் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!

புதிய ஒன்பிளஸ் டிவியின் டிஸ்பிளே அளவு என்னவாக இருக்கும்? அதன் ஸ்மார்ட் ரிமோட்டில் அப்படி என்னதான் உள்ளது? இதன் சவுண்ட் சிஸ்டம் எப்படி இருக்கும்? போன்ற கேள்விகளுக்கான விடைகள் இதோ!

Samayam Tamil 23 Sep 2019, 11:34 am
இந்த தீபாவளிக்கு பட்டாசுகள் வாங்குகிறோமோ இல்லையோ! ஒரு ஸ்மார்ட் டி.வி வாங்கி விடலாம் போல! அந்த அளவிற்கு புத்தம் புதிய ஸ்மார்ட் டிவிக்கள் ஆனது இந்திய சந்தைக்குள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.
Samayam Tamil OnePlus TV Specs


சமீபத்தில் மோட்டோரோலா நிறுவனமா அதன் முதல் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்து, ஸ்மார்ட் டிவி பிரிவில் நுழைந்தது, பின்னர் சியோமி தனது ஸ்மார்ட் டிவி வரிசையை அதன் மி டிவி 4 எக்ஸ் உடன் மேம்படுத்தியது.

இருப்பினும் கூட அனைவரின் கவனமும் இந்த மாத இறுதியில் வெளியாகும் "ஒரு மிகப்பெரிய வெளியீடு" மீது தான் குவிந்து இருக்கிறது - அது ஒன்பிளஸ் டிவி ஆகும்!

New Mi TVs: வெறும் ரூ.17,999 முதல் 4 புதிய மி டிவிக்கள் இந்தியாவில் அறிமுகம்! என்ஜாய்!

ஒன்ப்ளஸின் முதல் ஸ்மார்ட் டிவி ஆனது இந்திய பயனர்களுகென்றே சில தனித்துவமான அம்சங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியாக வரவிருக்கும் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியைப் பற்றி இதுவரை எங்களுக்குத் தெரிந்த ஐந்து முக்கியமான விஷயங்களை பகிர்ந்துள்ளோம்!

01. டிஸ்பிளே

ஒன்பிளஸின் முதல் ஸ்மார்ட் டிவி ஆனது 55 இன்ச் அளவிலான கியூஎல்இடி பேனல் மற்றும் 4 கே ரெசல்யூஷனுடன் வரும். ஒன்பிளஸ் டிவி டால்பி விஷனை ஆதரிக்கும், இது அட்டகாசமான Colours, contrast மற்றும் brightness level-களை கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட் டிவியில் வண்ண வரம்பை உச்சத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தின் கீழ் காமா கலர் மேஜிக் செயலி பயன்படுத்தப்பட்டுள்ளதை ஒன்பிளஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன் QLED பேனல் ஆனது பிரீமியம் OLED உடன் ஒப்பிட முடியாது தான், இருந்தாலும் அது அதற்கே உரிய சில சொந்த நன்மைகளைக் கொண்டுருக்கும் என்று கூறப்படுகிறது உதாரணமாக, இதன் தனித்த backlighting ஆனது QLED-க்களின் வண்ணத்தையும், பிரகாசத்தையும் மேம்படுத்தும்.


02. ஸ்மார்ட் ரிமோட்

மற்ற ஸ்மார்ட் டிவி ரிமோட்களைப் போலல்லாமல், ஒன்பிளஸ் "குறைந்தபட்ச" பட்டன்களை கொண்டுள்ளது. உடன் டிராக்பேட் போன்ற நேவிகேஷன் பேனலையும் கொண்டுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் பகிர்ந்த அதிகாரப்பூர்வ படங்களின் அடிப்படையில், ஒன்பிளஸ் டிவியில் ஆப்பிள் டிவி ரிமோட் போலவே மிகவும் மெலிதான உடல் வடிவமைப்பை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் டிவி ஸ்மார்ட் ரிமோட் ஆனது அதன் பக்கவாட்டில், ஸ்மார்ட்போன்களில் இருப்பதை போன்றே Physical volume rocker ஒன்றை கொண்டுள்ளது. உடன் அதன் கீழே ஒரு யூ.எஸ்.பி போர்ட்டும் உள்ளது. இந்த ரிமோட்டின் மற்றொரு சிறப்பம்சமாக ஒன்பிளஸின் கஷ்டம் டிவி ஓஎஸ் மற்றும் கூகுள் அசிஸ்டென்ட்டிற்கான பிரத்யேக பொத்தான்கள் உள்ளன.

OnePlus TV Remote: ரிமோட்டே இப்படி இருக்கிறது என்றால் ஒன்பிளஸ் டிவி எப்படி இருக்கும்?

03. சக்திவாய்ந்த ஒலி

ஒன்பிளஸ் டிவி ஆனது உள்ளமைக்கப்பட்ட எட்டு ஸ்பீக்கர்களுடன் வருகிறது. இதன் மொத்த சவுண்ட் அவுட்புட் ஆனது 50 வாட்ஸ் என்று கூறப்படுகிறது. இது நவீன பிரீமியம் மற்றும் இடைப்பட்ட ஸ்மார்ட் டிவிக்களில் உள்ளதை விட மிகவும் அதிகம்.

ஒன்பிளஸ் டிவியின் ஒலி அமைப்பானது, இரண்டு முன் பக்கம் எதிர்கொள்ளும் ஸ்பீக்கர்களுடன் சவுண்ட்பார் போன்ற வடிவமைப்பையும், பக்கவாட்டில் மூன்று சிறிய ஸ்பீக்கர்களாக இரண்டு ஜோடிகளையும் கொண்டுள்ளது. ஒன்பிளஸ் டிவி ஆனது டால்பி அட்மோஸை ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் அதன் டிவியின் ஒலி மேம்படுத்தலுக்காக சில ஸ்மார்ட் அம்சங்களையும் சேர்க்கிறது. உதாரணமாக, உங்கள் ஸ்மார்ட்போனில் நீங்களொரு அழைப்பைப் பெறும்போது அது தானாகவே டிவியின் ஒளி அளவைக் குறைக்கும். இது சாத்தியமாக நீங்கள் உங்களின் ஸ்மார்ட்போனை ஸ்மார்ட் டிவியுடன் இணைக்க வேண்டும்.

04. உள்ளடக்கம் (Content)

இலவச உள்ளடக்கங்களுக்கான அணுகல் என்பது ஒன்பிளஸ் டிவியை வாங்குவதற்கான மிகப்பெரிய காரணமாக இருக்கலாம். ஒன்ப்ளஸ் அதன் உள்ளடக்க கூட்டாளர்களின் முழு பட்டியலையும் வெளியிடவில்லை என்றாலும் கூட, ஈரோஸ் நவ் மற்றும் ஜீ5 பிரீமியம் போண்றவைகள் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

Facebook TV Streaming Device: சத்தம் போடாமல் வேலை பார்க்கும் ஃபேஸ்புக்!

ஈரோஸ் நவ் தனது முழு பட்டியலையும் ஒன்பிளஸ் டிவி பயனர்களுக்கு டால்பிக்கான தேர்வுமுறையுடன் விரிவுபடுத்துவதாக உறுதியளித்துள்ளது. மறுகையில் உள்ள ZEE5 ஆனது அதன் முழு உள்ளடக்கத்தையும் 12 மொழிகளில் வழங்க உள்ளது. அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி நெருங்கி வருவதால் ஒன்பிளஸ் அதன் முழு உள்ளடக்க கூட்டாளர்களையும் அறிவிக்க வாய்ப்புள்ளது.


05. வடிவமைப்பு

ஒன்பிளஸ் டிவியின் வடிவமைப்பு குறித்த விவரங்கள் இப்போது வரையிலாக குறைவாகவே உள்ளன. இருந்தாலும் கூட நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன பீட் லாவ் அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதன்படி, ஒன்பிளஸ் டிவியானது single handle bar கொண்ட ஒரு க்ரோம்-பூச்சுடன் வெளியாகும் என்பதும், அதன் பேக் பேனலில் கெவ்லர் போன்ற கடினமான அமைப்பு இடம்பெறும் என்பதையும் அறிய முடிகிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களுடன் (OnePlus 7T மற்றும் OnePlus 7T Pro) அதன் ஒன்பிளஸ் டிவியை வருகிற செப்டம்பர் 26 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்