ஆப்நகரம்

Oppo F11 Pro: ஒரு நாளைக்கு 100 செல்பி, வீதம் ஆறு வருஷத்துக்கு போட்டோ எடுத்துட்டே இருக்கலாம்!

வரும் மார்ச் 5ம் தேதி ஓப்போ F11 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இதிலுள்ள கேமராவின் பலத்தை ஓப்போ நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது

Samayam Tamil 18 Mar 2019, 7:00 pm
வரும் மார்ச் 5ம் தேதி ஓப்போ F11 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இதிலுள்ள கேமராவின் பலத்தை ஓப்போ நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது.
Samayam Tamil oppo f11 pro


அண்மையில் விவோ நிறுவனம் தன்னுடைய விவோ வி15 ப்ரோ, விவோ நெக்ஸ் மொபைலில் பாப்அப் கேமரா வசதி பிரபலமடைந்தது. தற்போது அதே போன்று ஒப்போ F11 ஸ்மார்ட்போனிலும் பாப்அப் கேமரா வசதி உள்ளது. வேறு பிராண்ட் என்பதால், இதற்கு ரைசிங் கேமரா என்று பெயரிடப்பட்டுள்ளது. 25 மெகாபிக்சல் வரையில் இது இருக்கிறது.

டிஸ்ப்ளே பொறுத்தவரையில் முழுக்க முழுக்க LTPS LCD டிஸ்ப்ளேவாக இருக்கலாம் என்றும், 6.5 இன்ச் வரையில் திரை அளவு உள்ளது.. மொபைலின் பின்புறத்தில் 48 எம்பி மெகா பிக்சல் மற்றும் 5 மெகா பிக்சல் கேமராவும் கொண்டுள்ளது.

மூன்று நிறங்களைக் கொண்டு ஒப்போ F11 ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. 20 மடங்கு அதிவேகமாக சார்ஜ் ஆகும் VOOC 3.0 சார்ஜிங் வசதியும் உள்ளது. VOOC என்றால், Voltage Open Loop Multistep constant Current Charging ஆகும். அதிக ஆம்பயர் கரண்ட் அனுப்புவதன் மூலம் மொபைல் வெகு சீக்கரமாக சார்ஜ் ஆகிவிடுகிறது. பேட்டரி சக்தி 4,000 mAH. MTK P70 பிராசசர் உள்ளது. ஏற்கனவே வெளிவந்த மாடல்களின் அடிப்படைில், ஒப்போ F11 ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம் கொண்ட மாடலின் விலை 24,990 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்