ஆப்நகரம்

Oppo A15 : தரமான பட்ஜெட் போன்; 10% கேஷ்பேக் ஆபருடன் அமேசானில் விற்பனை!

ஒப்போ நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் மொபைல் ஆன ஒப்போ ஏ 15 மாடல் அமேசான் வழியாக ரூ.10,990 க்கு வாங்க கிடைக்கிறது.

Samayam Tamil 23 Oct 2020, 3:19 pm
ஒப்போ நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக ஒப்போ ஏ 15 மாடல் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்த ஸ்மார்ட்போன், இன்று முதல், அமேசான் இந்தியா வழியாக வாங்குவதற்கு கிடைக்கிறது.
Samayam Tamil Oppo A15 India Sale Offers


சீன மொபைல்களுக்கு எதிரான Micromax In Series; நவம்பர் 3-இல் அறிமுகம்!

ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனின் சிங்கிள் 3 ஜிபி + 32 ஜிபி வேரியண்ட் ஆனது இந்தியாவில் ரூ.10,990 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. இது டைனமிக் பிளாக் மற்றும் மிஸ்டரி ப்ளூ என இரண்டு வண்ண வகைகளில் வருகிறது.

அதிரடி ஆபர்களுடன் இந்தியாவில் ஐபோன் 12, 12 ரோ ப்ரீ-ஆர்டர் தொடக்கம்!

விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, அமேசான் வழியாக ஒப்போ ஏ 15 ஸ்மார்ட்போனை எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் / டெபிட் கார்டுகள் வழியாக வாங்கினால் அல்லது இ.எம்.ஐ விருப்பங்களை பயன்படுத்தினால் பயனர்களுக்கு 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

ஒப்போ ஏ 15 ஸ்மார்ட்போனின் முழு அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:

டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் அடிப்படையிலான கலர்ஓஎஸ் 7.2 மூலம் இயங்குகிறது மற்றும் இது 6.52 இன்ச் அளவிலான எச்டி + (720x1,600 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

ஹூட்டின் கீழ், 3 ஜிபி ரேம் உடன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 35 SoC ப்ராசஸர் உள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவைகள் உள்ளன.

செல்பீ மற்றும் வீடியோ சாட்களுக்கு, இந்த ஸ்மார்ட்போனில் 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார் உள்ளது. மேலும் இது மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக 256 ஜிபி வரை மெமரி விரிவாக்கத்திற்கான ஆதரவினையும் கொண்டுள்ளது.

தவிர ஒப்போ ஏ 15 ஸ்மார்ட்போனில் 32 ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ-யூ.எஸ்.பி மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக் ஆகியவைகள் உள்ளன.

இந்த ஸ்மார்ட்போனில் பின்புறத்தில் கைரேகை சென்சார் உள்ளது. ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன் 10W சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,230 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. கடைசியாக, இது அளவீட்டில் 164x75x8 மிமீ மற்றும் 175 கிராம் எடையும் கொண்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்