ஆப்நகரம்

Oppo Reno 5 Lite : சைலன்ட் ஆக ரெடியாகும் இன்னொரு வயலென்ட் ஆன போன்!

ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ 5 தொடரின்கீழ் ரெனோ 5 லைட் 5ஜி என்கிற புதிய ஸ்மார்ட்போனை 30W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் அறிமுகம் செய்யலாம்.

Samayam Tamil 29 Dec 2020, 3:25 pm
சமீபத்தில் சீனாவில் அறிமுகமான ரெனோ 5 தொடரின் கீழ் மேலுமொரு புதிய மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என்றும், அது ஒப்போ ரெனோ 5 லைட் என்று அழைக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதை உறுதிப்படுத்தும் வண்ணம், இந்த லேட்டஸ்ட் ஒப்போ ஸ்மார்ட்போன் ஆனது சீனாவின் 3 சி இணையதளத்தில் PELM00 என்கிற மாடல் நம்பரின் கீழ் காணப்பட்டுள்ளது.
Samayam Tamil Oppo Reno 5 Pro India Launch


Mi 11 அறிமுகம்: கனவு விலையில் 108MP ட்ரிபிள் கேம் போன்ற மிரட்டும் அம்சங்கள்!

அந்த அறிக்கையில், ஒப்போ ரெனோ 5 லைட் ஸ்மார்ட்போனின் சார்ஜிங் சார்ந்த தகவலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் 30W VOOC 4.0 சார்ஜர் உடன் தொடர்புடைய மாடல் நம்பர் VC56HACH உடன் காணப்படுகிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகு போது இது 30W பாஸ்ட் வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று அர்த்தம்.

ஸ்மார்ட்போனிற்கான பெயர் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இதை ரெனோ 5 லைட் என்று அழைக்கப்படலாம் என்று முன்னர் வெளியான ஆதாரங்களை MyFixGuide தளம் மேற்கோள் காட்டுகிறது.

இது சாத்தியமாகும் பட்சத்தில் அதே தொடரின் கீழ் வெளியிடப்பட்ட மற்ற 3 ஸ்மார்ட்போன்களுடன் லைட் மாடலும் இணையும். மேலும் மற்ற ரெனோ 5 மாடல்களுடன் ஒப்பிடும்போது 'லைட்' எடிஷன் ஆனது சற்றே குறைக்கப்பட்ட அம்சங்களுடன் வர வேண்டும்.

ஒப்போ ரெனோ 5 5ஜி அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:

- டூயல் சிம் (நானோ) ஆதரவு
- ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 11.1
- 6.43 இன்ச் ஃபுல்-எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) ஓஎல்இடி டிஸ்ப்ளே
- 90 ஹெர்ட்ஸ் புரெஃப்ரெஷ் ரேட்
- 91.7 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதம்
- 410 பிபி பிக்சல் அடர்த்தி

- ஸ்னாப்டிராகன் 765 ஜி SoC ப்ராசஸர்
- அட்ரினோ 620 ஜி.பீ.யூ
- 12 ஜிபி ரேம்

- குவாட் ரியர் கேமரா அமைப்பு
- 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் (எஃப் / 1.7 லென்ஸ்)
- 8 மெகாபிக்சல் சென்சார் அல்ட்ரா-வைட் ஆங்கிள் (எஃப் / 2.2 லென்ஸ்)
- எஃப் / 2.4 லென்ஸ் கொண்ட 1 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்
- எஃப் / 2.4 லென்ஸுடன் 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் ஷூட்டர்
- 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா

- 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஸ்டோரோஜை விரிவாக்க முடியாது
- டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, ஜி.பி.எஸ் / ஏ-ஜி.பி.எஸ், க்ளோனாஸ், 3.5 மிமீ ஹெட்ஜாக்
- சார்ஜ் செய்ய யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
- 4,300 எம்ஏஎச் பேட்டரி
- 65W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- Geomagnetic sensor, proximity sensor, accelerometer, gravity sensor, gyroscope போன்ற சென்சார்கள்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர்
- அளவீட்டில் 159.1x73.4x7.9 மிமீ
- எடையில் 172 கிராம்.
- ஸ்டாரி நைட் கலர் வேரியண்ட்டின் எடை 180 கிராம்.

ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:

- டூயல் சிம் (நானோ) ஆதரவு
- ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 11.1
- 6.55 இன்ச் ஃபுல்-எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) ஓஎல்இடி டிஸ்ப்ளே
- 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 92.1 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதம்
- 402 பிபி பிக்சல் அடர்த்தி

- மீடியாடெக் டைமன்சிட்டி 1000+ SoC ப்ராசஸர்
- ARM G77 MC9 GPU மற்றும் 12GB வரை ரேம்

- குவாட் ரியர் கேமரா அமைப்பு
- 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் (எஃப் / 1.7 லென்ஸ்)
- 8 மெகாபிக்சல் சென்சார் அல்ட்ரா-வைட் ஆங்கிள் (எஃப் / 2.2 லென்ஸ்)
- எஃப் / 2.4 லென்ஸ் கொண்ட 1 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்
- எஃப் / 2.4 லென்ஸுடன் 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் ஷூட்டர்
- 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா

- 256 ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஸ்டோரேஜை விரிவாக்க முடியாது
- டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, ஜி.பி.எஸ் / ஏ-ஜி.பி.எஸ், க்ளோனாஸ், 3.5 மிமீ ஹெட்ஜாக்
- சார்ஜ் செய்ய யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
- 4,350 எம்ஏஎச் பேட்டரி
- 65W வேகமான சார்ஜிங் ஆதரவு
- Geomagnetic sensor, proximity sensor, accelerometer, gravity sensor, gyroscope போன்ற சென்சார்கள்
- அளவீட்டில் 159.7x73.2x7.6 மிமீ
- எடையில் 173 கிராம்.

ஒப்போ ரெனோ 5 ப்ரோ பிளஸ் 5ஜி அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:

- டூயல் சிம் ஆதரவு
- 6.55 இன்ச் ஃபுல்-எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே
- 20: 9 என்கிற அளவிலான திரை விகிதம்
- 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 402ppi பிக்சல் டென்சிட்டி
- 180Hz டச் சாம்ரேட்

- ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான கலர்ஓஎஸ் 11.1 ஓஎஸ்
- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC
- 8 ஜிபி அல்லது 12 ஜிபி ரேம்

- குவார் ரியர் கேமரா அமைப்பு
-50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 766 முதன்மை சென்சார் (எஃப் / 1.8 லென்ஸ்)
- 16 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா (எஃப் / 2.2 லென்ஸ்)
- 13 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் (எஃப் / 2.4 லென்ஸ்)
- 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் (எஃப் / 2.4 லென்ஸ்)
- 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா ( எஃப் / 2.4 லென்ஸ், 81 டிகிரி பீல்ட் ஆப் வியூ - எஃப்ஒவி)

- 128 ஜிபி மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் விருப்பங்கள்
- இரண்டைமே மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக விரிவாக்க முடியாது

108MP Camera Phone : ஜனவரி 5-இல் இந்தியாவில் அறிமுகமாகும் வேற லெவல் Mi போன்!

- 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் வி 5.2, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்ற இணைப்பு விருப்பங்கள்
- accelerometer, ambient light, colour temperature sensor, gyroscope, magnetometer மற்றும் proximity போன்ற சென்சார்கள்
- இன்-டிஸ்ப்ளே பிங்கர் ப்ரிண்ட் சென்சார்.

- 65W SuperVOOC 2.0 பாஸ்ட் சார்ஜிங்
- 4,500 எம்ஏஎச் பேட்டரி
- அளவீட்டில்159.9x72.5x7.99 மிமீ
- எடையில் 184 கிராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்