ஆப்நகரம்

Portronics UFO PRO : பட்ஜெட் விலையில் ஒரு தரமான யுனிவர்சல் சார்ஜிங் ஸ்டேஷன் அறிமுகம்!

போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் யுஎஃப்ஒ ப்ரோ எனப்படும் யுனிவர்சல் சார்ஜிங் ஸ்டேஷனை 6 சார்ஜிங் போர்ட்களுடன் ரூ.1499 என்கிற அறிமுக விலைக்கு அறிமுகமாகியுள்ளது.

Samayam Tamil 18 Nov 2020, 6:31 pm
போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் “யுஎஃப்ஒ ப்ரோ” என்கிற ஒரு யுனிவர்சல் சார்ஜிங் ஸ்டேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. போர்ட்ரானிக்ஸ் யுஎஃப்ஒ ப்ரோ சார்ஜிங் ஸ்டேஷன் ஆனது அனைத்து முன்னணி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளிலிருந்தும் வாங்க கிடைக்கும்.
Samayam Tamil Portronics Universal Charging Station


BSNL அதிரடி ஆபர்: 15 நாட்களுக்கு FREE சிம் கார்டு; வாங்குவது எப்படி?

இது ரூ.1,499 என்கிற அறிமுக விலையில் வாங்க கிடைக்கிறது. இது கருப்பு நிறத்தில் மட்டுமே வெளியாகியுள்ளது. சுவாரசியமாக இது 12 மாத உத்தரவாதத்துடன் வருகிறது.

Nokia 2.4 மற்றும் Nokia 3.4: நவ.26 இல் இந்திய அறிமுகம்; வெயிட் பண்ணது வீணா போகல!

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள யுஎஃப்ஒ ப்ரோ உங்கள் அனைத்து சார்ஜிங் தேவைகளுக்கும் ஒரே ஒரு இடமாக திகழும். இது ஸ்மார்ட் ஆன, அதே சமயம் நேர்த்தியான ஒரு யுஎஃப்ஒ வடிவிலான சார்ஜிங் ஸ்டேஷன் ஆகும். இது ஒரே நேரத்தில் பல சாதனங்களை சார்ஜ் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு இறக்குமதி செய்யப்பட்ட நுண்ணறிவு சிப் உடன் வருகிறது, இது உங்கள் சாதனங்களுக்குத் தேவையான சக்தியின் அளவை உணர்ந்து செயல்படும் மற்றும் பல சார்ஜர்கள், அடாப்டர்களை சேர்ப்பதில் உள்ள சிக்கலையும் சரி செய்கிறது.

யுஎஃப்ஒ ப்ரோ ஆனது மொத்தம் 6 சார்ஜிங் போர்ட்களைக் கொண்டுள்ளது, இதன் மொத்த அவுட்புட் 12A / 60W வரை வழங்குகிறது. இது 1 டைப் சி 18 டபிள்யூ பி.டி போர்ட், 4 யூ.எஸ்.பி போர்ட்கள் மற்றும் 1 கியூசி 3.0 போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, போர்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, இது வேறு சாதாரண சார்ஜரை விட வேகமாக சார்ஜ் செய்யும்.

இந்த சார்ஜிங் ஸ்டேஷன் ஒரு நிலையான 1 மீட்டர் ஏசி பவர் கார்டுடன் வருகிறது, இது 220வ v வால் சாக்கெட் மற்றும் பிற உலகளாவிய சாக்கெட்டுகளுடன் நன்றாக வேலை செய்கிறது.

இந்த மல்டிஃபங்க்ஸ்னல் சாதனமானது BIS- சான்றளிக்கப்பட்டுள்ளது மற்றும் Fire Retardant மற்றும் Surge Protection ஆகியவைகள் உங்கள் எல்லா சாதனங்களுக்கும் அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்கிறது.

இது உயர்தர வலுவான ஏபிஎஸ் பிளாஸ்டிக் பொருட்களால் கட்டப்பட்டுள்ளது, இது சார்ஜிங் ஸ்டேஷன் அதிக வெப்பமயமாதல் சிக்கல்களிலிருந்து பாதுகாக்கப்படுகிறது, மேலும் ஷாக் ஃப்ரூப்பையும் அளிக்கிறது.

நீங்கள் ஒரே நேரத்தில் பல சாதனங்களை சார்ஜ் செய்யும்போது மின்காந்த குறுக்கீடு இல்லை என்பதை நிலையத்தின் ‘யுஎஃப்ஒ’ வடிவம் உறுதி செய்கிறது.

போர்ட்ரானிக்ஸ் யுஎஃப்ஒ ப்ரோ சிறிய மற்றும் இலகுரக சாதனம் ஆகும். இது வெறும் 136 கிராம் எடையை மட்டுமே கொண்டுள்ளது, மேலும் எங்கும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.

அனைத்து Android ஸ்மார்ட்போன்கள், ஐபோன்கள், ஐபாட்கள், டேப்லெட்டுகள், ப்ளூடூத் ஹெட்ஃபோன்கள், பவர் பேங்குகள், எம்பி 3 பிளேயர்கள் மற்றும் 5 வி, 9 வி மற்றும் 12 வி யூ.எஸ்.பி சாதனங்களையும் இந்த யுஎஃப்ஒ ப்ரோ ஆதரிக்கிறது.

QC பவர், டைப் C, USB சார்ஜிங் போர்ட்களில் சார்ஜ் செய்ய ஒரே நேரத்தில் ஒருவர் இதைப் பயன்படுத்தலாம். மேலும் சார்ஜிங் ஸ்டேஷன் பேட்டரி ஆயுளின் நிலையைக் காண்பிப்பதற்கான அதில் ஒரு எல்.ஈ.டி பவர் இன்டிகேட்டரும் உள்ளது. மேலும் இது உலகளாவிய வால் சாக்கெட்டுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்