ஆப்நகரம்

FAU-G கேம் எப்போது அறிமுகமாகும்? தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

FAU-G கேம் இந்தியாவில் ஒரு தரமான தேதியில் அறிமுகம் செய்யப்படவுள்ளது... முடிஞ்சா என்ன தேதி என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்...

Samayam Tamil 4 Jan 2021, 10:23 am
இந்திய கேம் விரும்பிகளால் மிகவும் எதிர்பார்க்கப்படும் FAU-G அல்லது Fearless And United Guards மொபைல் கேம் ஆனது எப்போது அறிமுகமாகும் என்கிற அதிகாரப்பூர்வமான தகவலை கேமின் டெவலப்பர் ஆன nCore அறிவித்துள்ளது.
Samayam Tamil FAUG Game


PUBG மீண்டும் வரும்னு நம்பி வெயிட் பண்றீங்களா ப்ரோ? அப்போ இத படிக்காதீங்க!

விஷால் கோண்டல் மற்றும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ஆகியோர் தங்களது ட்விட்டர் அக்கவுண்ட் வழியாக FAU-G கேமின் அறிமுக தேதியை அறிவித்தனர், நினைவூட்டும் வண்ணம், தனியுரிமை மற்றும் பாதுகாப்பு காரணங்களால் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள பிரபல PUBG மொபைலின் போட்டியாளர் என்று அழைக்கப்படுகிறது. இந்த இரு காரணத்திற்காகவே இதன் மீதான எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டிருக்கிறது, அதே சமயம் இதன் அறிமுகம் மிகவும் தாமதமாகி கொண்டே போனது. ஒருவழியாக இதன் அறிமுக தேதி உறுதியாகியுள்ளது

FAU-G கேம் 2020 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்சன் கேம்களில் ஒன்றாகும். ஆனால் இது 2021-இல் தன அறிமுகமாகும் என்று கேம் பிரியர்களுக்கு தெரியாமல் போனது. நீண்ட காத்திருப்பிற்கு பின்னர் இது ஜனவரி 26 ஆம் தேதி அறிமுகமாகிறது.

நினைவூட்டும் வண்ணம் இந்த கேம் நீண்ட காலமாக முன் பதிவு செய்ய கிடைக்கிறது. ஆர்வம் இருந்தால், கூகுள் பிளே ஸ்டோர் செல்வதின் மூலம் நீங்கள் இந்த கேமை முன் பதிவு செய்யலாம்.

Mi 11 அறிமுகம்: கனவு விலையில் 108MP ட்ரிபிள் கேம் போன்ற மிரட்டும் அம்சங்கள்!

இந்த ஆக்சன் கேம் ஆரம்பத்தில் Google Play ஸ்டோரில் Android பயனர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும். எதிர்காலத்தில் ஆப்பிள் ஆப்பிற்குள் நுழையுமா என்பது குறித்த விவரங்கள் எதுவும் இல்லை.

முன்னதாக வெளியான FAU-G டீஸரின்படி, இந்த கேம் இந்திய மற்றும் சீனப் படைகளுக்கிடையேயான கால்வான் பள்ளத்தாக்கு மோதல்களை Line of Actual Control (எல்ஏசி) உடன் பின்பற்றும் ஒரு லெவல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேம் டிஸ்க்ரிப்ஷன் ஆனது முழு கேமும் இந்திய வீரர்களை மையமாகக் கொண்டதாக இருக்கும் என்று கூறுகிறது.

கதாபாத்திரங்கள் FAU-G கமாண்டோஸ் என்று அழைக்கப்படுவார்கள், இது ஆபத்தான பிரதேசத்தில் ரோந்து செல்லும் இந்திய வீரர்களின் உயரடுக்கு குழுவாகும்.

நினைவூட்டும் வண்னம் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் உடன் இணைந்து பெங்களூரைச் சேர்ந்த என் கோர் கேம்ஸ் நிறுவனத்தால் FAU-G உருவாக்கப்பட்டது. முதல் டீஸர் அக்டோபர் 25 அன்று நேரலைக்கு வந்தது. கேமின் வெளியீடு அதே மாதத்தில் திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது, ஆனால் அது நடக்கவில்லை. பின்னர் டெவலப்பர்கள் நவம்பர் மாதத்தில் இதன் வெளியீட்டை அறிவித்தனர்,அப்போதும் வெளியாகவில்லை. எனவே ஜனவரி 26 ஆம் தேதி இது நிச்சயமாக அறிமுகமாகுமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்