ஆப்நகரம்

வெறும் ரூ.1 க்கு D2h அறிவித்துள்ள ரம்ஜான் + லாக்டவுன் ஆபர்!

ரமலான் பண்டிகையை கொண்டாடும் நோக்கத்தின் கீழ் D2h நிறுவனம் சில அட்டகாசமான சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

Samayam Tamil 2 May 2020, 2:27 pm
டிஷ் டிவியின் டி.டி.எச் பிராண்டான D2h தனது வாடிக்கையாளர்களுக்கு பல அற்புதமான சலுகைகள் மற்றும் பேக்கேஜ்களை அறிவித்துள்ளது.
Samayam Tamil D2H Offers


நிறுவனத்தின் "Friends and Family Recharge" ஆனது எந்தவொரு d2h வாடிக்கையாளருக்கும் d2h வலைத்தளம் வழியாகவோ அல்லது d2h இன்பினிட்டி ஆப் வழியாகவோ அந்தந்த RTN கள் / வாடிக்கையாளர் ஐடிகளைப் பயன்படுத்தி வேறு எந்த d2h வாடிக்கையாளருக்கும் ரீசார்ஜ் செய்ய அனுமதிக்கிறது.

இதை சலுகையின் ஒரு பகுதியாக ரீசார்ஜ் செய்வதற்கு ரூ.10 கேஷ்பேக்காக கிடைக்கும்.

இந்த டி.டி.எச் நிறுவனத்திலிருந்து புதுப்பிக்கப்பட்ட மற்ற திட்டங்களில் ஒன்று தான், அதன் ‘யூ ப்ராமிஸ் வி ரெஸ்யூம்’ திட்டம், இது வாடிக்கையாளர்களுக்கு மாதம் வெறும் ரூ.10 க்கு ஐந்து நாட்கள் நீட்டிக்கப்பட்ட ரீசார்ஜ் கிரெடிட் விண்டோவை வழங்குகிறது.

இந்த நேரம் பார்த்து இப்படியொரு ஆபரா? டெம்ப்ட் ஏற்றும் சாம்சங்!

கூடுதலாக, டி2ஹெச் ரம்ஜான் தொடர்பான கன்டென்ட்களை இயக்கும் சேனல் 785 இல் இலவச ‘ரம்ஜான் முபாரக்’ நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும், இப்போது ஒரு புதிய ‘ஸ்பெஷல் ரம்ஜான் காம்போ’ திட்டமும் கிடைக்கிறது, இது சந்தாதாரர்கள் பிராந்திய செய்தி சேனல்களுடன் ஆன்மீக இஸ்லாமிய சேனல்களை ரூ.78.60 என்கிற ரீசார்ஜ் மூலம் பார்க்க அனுமதிக்கிறது, இது ஒரு எளிய மிஸ்டு கால் ஆக்டிவ் மற்றும் டிஆக்டிவேட் செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்றொரு ரம்ஜான் சலுகையாக நிறுவனம் அதன் இஸ்லாமிய ஆன்மீக சேவையான Ibadat Active-ஐ முதல் மாதத்திற்கு வெறும் ரூபாய் 1 க்கு வழங்குகிறது. இது சேனல் எண் 786 இல் கிடைக்கிறது.

நீங்க TikTok யூஸ் பண்றீங்களா? முதல்ல இதை படிங்க நண்பா-நண்பிகளே!

கொரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 பரவல் மற்றும் பீதி காரணமாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள மூன்றாம் நிலை லாக்டவுன் நாட்களில் தனது வாடிக்கையாளர்களை வீட்டிலேயே பொழுது போக்கிக்கொள்ளும் நோக்கத்தின் கீழ், d2h நிறுவன அதன் கன்டென்ட்-ரிச் சேவைகளான - ஃபிட்னஸ் ஆக்டிவ், டான்ஸ் ஆக்டிவ், த்ரில்லர் ஆக்டிவ், எவர்க்ரீன் கிளாசிக் ஆக்டிவ், காமெடி ஆக்டிவ், கிட்ஸ் ஆக்டிவ் போன்றவைகளை - முதல் மாதத்திற்கு ரூ.1 க்கு வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்