ஆப்நகரம்

ஓப்போ ரியல்மீ 2 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம்

வித்தியாசமான கேமரா அமைப்பு கொண்ட ஓப்போ நிறுவனத்தின் ரியல்மீ 2 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 27 Sep 2018, 1:14 pm
ஓப்போ நிறுவனத்தின் ரியல்மீ 2 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
Samayam Tamil RealMe-2-Pro-on-Flipkart-Max-Style


சீனாவைச் சேர்ந்த ஓப்போ நிறுவனம் ரியல்மீ என்ற புதிய பிராண்டில் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த வரிசையில் ஓபோ ரியல்மீ 2 ப்ரோ என்ற புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

பிளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வர இருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 16MP டூயல் ரியர் கேமராவும் 16MP செல்ஃபி கேமராவும் உள்ளன. குவால்காம் ஸ்னாப்டிராகன் 660AIE பிராசெசர் கொண்ட இந்த மொபைல் ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்குதளத்தையும் பெற்றிருக்கிறது.

6.3 இன்ச் Full HD டச் ஸ்கிரீன், 8GB RAM, 128GB ROM, கைரேகை சென்சார் ஆகிய அம்சங்களும் இதில் உள்ளன. Dewdrop style notch என்ற வித்தியாசமான கேமரா அமைப்பு புதிய அம்சமாக உள்ளது. ஐஸ் லேக், ப்ளூ ஓசன், பிளாக் சீ ஆகிய நிறங்களில் இந்த மொபைல் உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்