ஆப்நகரம்

Flipkart : உங்க பட்ஜெட் ரூ.15K என்றால் கண்ணை மூடிக்கிட்டு இந்த போனை வாங்கலாம்!

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது Flipkart வழியாக வாங்க கிடைக்கிறது. என்ன விலை, என்னென்ன அம்சங்கள், இதோ முழு விவரங்கள்.

Samayam Tamil 1 May 2021, 10:12 am

ஹைலைட்ஸ்:

  • ரியல்மி 8 5ஜி Flipkart வழியாக வாங்க கிடைக்கிறது
  • பார்த்தால் Flash Sale போல் தெரியவில்லை
  • Big Saving Days விற்பனையின் ஒரு பகுதியாக இருக்கலாம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Realme 8 5G Sale flipkart
சமீபத்தில் இந்தியாவில் ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக ரியல்மி 8 5ஜி மாடல் அறிமுகமானது.
இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஆனது 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 ப்ராசஸர், ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு, ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே வடிவமைப்பு போன்ற கவனிக்கத்தக்க அம்சங்களை கொண்டுள்ளது.

ரூ.13,999-க்கு இப்படி ஒரு Phone-ஆ! இனி Realme 7, POCO M3-லாம் எதுக்கு?

அதாவது ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மி 8 ப்ரோவுடன் ஒப்பிடும் போது குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

ரியல்மி 8 5ஜி - 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.14,999
ரியல்மி 8 5ஜி - 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.16,999

Redmi Note 10 Pro Max சேல்: இன்னைக்கு ஆர்டர் மிஸ் ஆகவே கூடாது!

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சூப்பர்சோனிக் பிளாக் மற்றும் சூப்பர்சோனிக் ப்ளூ என்கிற இரண்டு வண்ண விருப்பங்களின் கீழ் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி அதன் முதல் விற்பனையை சந்தித்தது, தற்போது, இது பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கிறது.

இதை பார்த்தால் பிளாஷ் விற்பனை போல் தெரியாவில்லை, அதே சமயம் ஓப்பன் சேல் குறித்த தகவலும் வெளியாகவில்லை.ஒருவேளை Flipkart-இல் நாளை தொடங்கும் சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக ரியல்மி 8 5ஜி 24/7 வாங்கும் விருப்பத்துடன் பட்டியலிடப்பட்டு இருக்கலாம்.

ரியல்மி 8 5G ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:

- டூயல் சிம் (நானோ)
- ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்
- ரியல்மி யுஐ 2.0

- 6.5 இன்ச் முழு எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) டிஸ்ப்ளே
- 20: 9 திரை விகிதம்
- 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- டிராகன்ட்ரெயில் கிளாஸ் பாதுகாப்பு

- மீடியா டெக் டைமன்சிட்டி 700 SoC
- ARM மாலி-ஜி 57 எம்சி 2 ஜி.பீ.யூ
- 8 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம்
- விர்ச்சுவல் ரேம்களாக மாற்றுவதற்கான டி.ஆர்.இ தொழில்நுட்பம்

- ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு
- 48 மெகாபிக்சல் சாம்சங் ஜிஎம் 1 முதன்மை சென்சார் (எஃப் / 1.8 லென்ஸ்)
- 2 மெகாபிக்சல் (மோனோக்ரோம், எஃப் / 2.4) போர்ட்ரெய்ட் லென்ஸ்
- 2 மெகாபிக்சல் (எஃப் / 2.4) மேக்ரோ லென்ஸ்
- நைட்ஸ்கேப், 48 எம் மோட், ப்ரோ மோட், ஏஐ ஸ்கேன் மற்றும் சூப்பர் மேக்ரோ போன்ற கேமரா அம்சங்கள்

- 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார் (எஃப் / 2.1 லென்ஸ்)
- போர்ட்ரெய்ட், நைட்ஸ்கேப் மற்றும் டைம்லேப்ஸ் போன்ற செல்பீ கேமரா அம்சங்கள்

- 128 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜ்
- பிரத்யேக ஸ்லாட், மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (1 டிபி வரை) விரிவாக்கலாம்
- 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் - Accelerometer, ambient light, magnetometer மற்றும் proximity சென்சார்
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்

- 18W க்விக் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம்
- 5,000 எம்ஏஎச் பேட்டரி
- அளவீட்டில் 162.5x74.8x8.5 மிமீ
- எடையில் 185 கிராம்.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்