ஆப்நகரம்

இனிமே இந்த லிஸ்ட்ல இருக்குற Realme மாடல்களை மட்டும் வாங்கவும்; ஏனென்றால்?

ஏனென்றால், ரியல்மி யுஐ 2.0 அப்டேட்டை பெறவுள்ள ஸ்மார்ட்போன்களின் லிஸ்ட்டையும் ரியல்மி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 26 Sep 2020, 1:44 pm
ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-இன் ஆரம்ப அணுகல் ரோல் அவுட் அட்டவணையை அடிப்படையாகக் கொண்ட ரியல்மி யுஐ 2.0 (Realme UI 2.0) அப்டேட் ஆனது எந்தெந்த ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு எப்போது அணுக கிடைக்கும் என்கிற தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil Realme UI Update


இந்தியாவில் இந்த வார தொடக்கத்தில் நடந்த ரியல்மி நார்சோ 20 தொடர் அறிமுகத்தின் போது ரியல்மி நிறுவனம் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையாகக் கொண்ட தனது ரியல்மி யுஐ 2.0-ஐயும் அறிமுகப்படுத்தியது.

Realme Narzo 20 Pro உடன் நார்சோ 20 மற்றும் 20A அறிமுகம்: விலை, விற்பனை & அம்சங்கள்!

அதனை தொடர்ந்து இப்போது இந்நிறுவனம் குறிப்பிட்ட அப்டேட்டை பெறும் ரியல்மி ஸ்மார்ட்போன்களின் பட்டியலை அறிவிக்கும் முழுமையான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

ரியல்மி நிறுவனத்தின் கம்யூனிட்டி போஸ்டின் படி, ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்த செப்டம்பர் மாதத்திலேயே ரியல்மி யூஐ 2.0 புதுப்பிப்பைப் பெறும், மீதமுள்ள ரியல்மி ஸ்மார்ட்போன்களானது குறிப்பிட்ட அப்டேட்டை அடுத்தடுத்து வரும் மாதங்களில் பெறும்.

Penta-Camera (அ) ஐந்து கேமராக்கள் கொண்ட முதல் சாம்சங் போன் இதுதான்!

இருப்பினும் அக்டோபரில் எந்த ரோல்அவுட்டும் இருக்காது. அடுத்து வரும் நவம்பர் மாதத்தில் ரியல்மி 7 ப்ரோ மற்றும் ரியல்மி நார்சோ 20 ஆகியவைகள் அப்டேட்டைப் பெறும்.

பின்னர் ரியல்மி 6 ப்ரோ, ரியல்மி 7, ரியல்மி நார்சோ 20 ப்ரோ, ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் 2020 டிசம்பரில் அப்டேட்டைப் பெறும். அதன் பிறகு, ரியல்மி 6i, ரியல்மி நார்சோ 10 ஆகிய ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி 2021 இல் அப்டேட்டை பெறும். பின்னர் மார்ச் 2020-இல் ரியல்மி சி 3, ரியல்மி நார்சோ 10 ஏ ஆகியவைகள் அப்டேட்டை பெறும்.

தொடர்புடைய மாடலுக்கான ஆரம்ப அணுகல் எடிஷன் மேலே குறிப்பிட்ட மாதத்திற்குள் தொகுப்பாக வெளியிடப்படும் என்று ரியல்மி கூறுகிறது, அதாவது மாததன் தொடக்கத்தில் வெளியிடப்படாது என்று அர்த்தம். ஸ்டாண்டர்ட் எடிஷன் ஆனது அனைத்து பயனர்களுக்கும் குறிப்பிட்ட காலத்திற்குள் தள்ளப்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்