ஆப்நகரம்

Realme GT 5G அறிமுகமானது; இனி Redmi, Poco-லாம் ஒண்ணுமே இல்ல!

ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக ரியல்மி ஜிடி 5ஜி மாடல் ஸ்னாப்டிராகன் 888 SoC, 120Hz AMOLED டிஸ்ப்ளே போன்ற பிரதான அம்சங்களுடன் அறிமுகம்.. என்ன விலை.. என்னென்ன அம்சங்கள்.. இதோ முழு விவரங்கள்.

Samayam Tamil 15 Jun 2021, 7:59 pm

ஹைலைட்ஸ்:

  • ரியல்மி ஜிடி 5ஜி அறிமுகம்
  • ஸ்னாப்டிராகன் 888 SoC கொண்டு இயங்குகிறது
  • ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Realme GT 5G
ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக Realme GT 5G மாடல் இன்று (ஜூன் 15) ஒரு மெய்நிகர் மாநாட்டின் வழியாக உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
வெறும் ரூ.50-க்கு இப்படி ஒரு BSNL Plan-ஆ! இவ்ளோ லேட்டா சொல்றீங்களே!

இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 SoC, 8 ஜிபி அல்லது 12 ஜிபி ரேம் வகைகள் மற்றும் 120 ஹெர்ட்ஸ் அமோலேட் டிஸ்ப்ளே, 256 ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ், டால்பி அட்மோஸ் ஆடியோ, 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் எஃகு கொண்டு தயாரிக்கப்பட்ட stainless steel-made vapour கூலிங் சிஸ்டம் போன்ற பிரதான அம்சங்களைக் கொண்டுள்ளது.

வச்சி செய்யும் Vivo; பிரபலமான 2 மாடல்கள் மீது திடீர் விலை உயர்வு!

இந்த ஸ்மார்ட்போனுடன் சேர்த்து ரியல்மி வாட்ச் 2 ப்ரோ மற்றும் ரியல்மி வாட்ச் 2 ஆகியவற்றின் உலகளாவிய விலையையும் ரியல்மி அறிவித்தது. கூடுதலாக, நிறுவனம் தனது முதல் டேப்லெட் மற்றும் லேப்டாப்பையும் டீஸ் செய்துள்ளது, இது முறையே ரியல்மி பேட் மற்றும் ரியல்மி புக் என்று அழைக்கப்படும்.

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை:

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆனது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.39,900 க்கும், இதன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆனது சுமார் ரூ.53,200 க்கும் அறிமுகமாகி உள்ளது.

ரியல்மி ஜிடி 5ஜி முதலில் போலந்து, ரஷ்யா, ஸ்பெயின் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் விற்பனைக்கு வரும், அதைத் தொடர்ந்து பிற சந்தைகளுக்கும் வரும்.

இது டாஷிங் ப்ளூ, டாஷிங் சில்வர் மற்றும் ரேசிங் யெல்லோ (வேகன் லெதர்) வண்ணங்களில் கிடைக்கும். இந்தியாவில் ரியல்மி ஜிடி 5ஜி அறிமுகம் குறித்த விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

- டூயல் சிம் (நானோ) ஆதரவு
- ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ 2.0
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் விகிதம்
- 91.7 சதவிகிதம் ஸ்க்ரீன் டூ பாடி விகிதம்
- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 SoC
- 12 ஜிபி வரை எல்பிடிடிஆர் 5 ரேம்
- ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு
- 64 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 682 முதன்மை சென்சார்
- 8 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் (வைட் ஆங்கிள் லென்ஸ்)
- 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்
- 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார் (எஃப் / 2.5 லென்ஸ்)
- 256 ஜிபி வரை யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ்
- 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
- யூ.எஸ்.பி டைப்-சி
- 3.5 மிமீ ஹெட்ஜாக்
- இன் டிஸ்பிளே கைரேகை சென்சார்
- 65W சூப்பர் டார்ட் சார்ஜிங் ஆதரவு
- 4,500 எம்ஏஎச் பேட்டரி
- இதன் கஸ்டம் சார்ஜிங் தொழில்நுட்பம் 35 நிமிடங்களில் உள்ளமைக்கப்பட்ட பேட்டரியை பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் செய்யும் என்று ரியல்மி கூறுகிறது.
- அளவீட்டில் 8.4 மிமீ தடிமன்
- எடையில் 186 கிராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்