ஆப்நகரம்

Realme X7 Pro அறிமுகம், விலை விவரங்கள்: புது போன் வாங்குற பிளான் இருக்கா?

ரியல்மி தனது சமீபத்திய ஸ்மார்ட்போன் ஆன ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ மாடலை இந்தியாவில் கூடிய விரைவில் அறிமுகப்படுத்தலாம். எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் முழு அம்சங்கள் இதோ.

Samayam Tamil 26 Dec 2020, 10:49 am
ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது வேண்டுமானால் அறிமுகம் செய்யப்படலாம் என்பது போல் தெரிகிறது. ஏனெனில் குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் ஆனது ரியல்மி இந்தியா சப்போர்ட் பேஜில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Samayam Tamil Realme X7 Pro 5G


50MP குவாட் கேம் உடன் நம்பமுடியாத விலைக்கு ஒப்போ ரெனோ 5 ப்ரோ + அறிமுகம்!

நினைவூட்டும் வண்ணம், இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, அதன் பிறகு தைவானிலும் அறிமுகமானது. ப்ரோ மாடலுடன் சேர்த்து இந்நிறுவனம் இந்தியாவில் அதன் ரியல்மி எக்ஸ் 7 5ஜி மாடலையும் அறிமுகம் செய்யும் என்று நம்பலாம்.

ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ மற்றும் ரியல்மி எக்ஸ் 7 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலை:

ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ மாடலானது மீடியாடெக் டைமன்சிட்டி 1000+ SoC மூலம் இயக்கப்படுகிறது மறுகையில் உள்ள ரியல்மி எக்ஸ் 7 5ஜி மாடலானது மீடியா டெக் டைமன்சிட்டி 800 யூ எஸ்ஓஇ-ஐ பேக் செய்கிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் குவாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 5 ஜி ஆதரவு போன்ற சில பொதுவான அம்சங்களை கொண்டுள்ளன.

மைஸ்மார்ட் பிரைஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ரியல்மி இந்தியா ஆதரவு பக்கத்தில் ரியல்மி எக்ஸ்7 ப்ரோ பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே இது வரும் வாரங்களில் இந்தியா சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று அர்த்தம்.

ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இரண்டு ஸ்டார்வ்ஜ் வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது: 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மாடல் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ. 39,000 க்கும், அதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆனது தோராயமாக ரூ.36,500 க்கும் அறிமுகமானது

மறுகையில் உள்ள ரியல்மி எக்ஸ் 7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின்கீழ் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.26,000 க்கு அறிமுகமானது.

ரியல்மி X7 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:

டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட ரியல்மி எக்ஸ் 7 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ரியல்மி யுஐ உடன் இயங்குகிறது. இது 6.4 இன்ச் அளவிலான புல் எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளேவை 90.8 சதவிகிதம் ஸ்க்ரீன் டூ பாடி விகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இது 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் விகிதத்துடன் வருகிறது. ரியல்மி எக்ஸ் 7 ஸ்மார்ட்போன் மாலி-ஜி 57 ஜி.பீ.யு உடன் ஆக்டா கோர் டைமன்சிட்டி 800 யூ எஸ்ஓசி மற்றும் 8 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களைப் பொறுத்தவரை, ரியல்மி எக்ஸ் 7 ஸ்மார்ட்போனில் குவாட் பின்புற கேமரா அமைப்பு உள்ளது. அதில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா (எஃப் / 1.8) + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் (எஃப் / 2.3) கேமரா + 2 மெகாபிக்சல் பிளாக் அண்ட் ஒயிட் போர்ட்ரெயிட் சென்சார் (எஃப் / 2.4) + எஃப் / 2.4 லென்ஸ் கொண்ட 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் உள்ளது. முன்பக்கத்தில், எஃப் / 2.5 லென்ஸுடன் 32 மெகாபிக்சல் சென்சார் உள்ளது.

ரியல்மி எக்ஸ் 7 ஸ்மார்ட்போன் 128 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 5 ஜி, 4 ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் வி 5.1, ஜிபிஎஸ், க்ளோனாஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவைகள் உள்ளன.

சென்சார்களை பொறுத்தவரை, geomagnetic sensor, ambient light sensor, proximity sensor, gyroscope மற்றும் accelerometer போன்றவைகள் உள்ளன. ரியல்மி எக்ஸ் 7 ஸ்மார்ட்போன் ஒரு 4,300 எம்ஏஎச் பேட்டரியால் சக்தியூட்டப்படுகிறது. இது 65W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது. அளவீட்டில் இந்த ஸ்மார்ட்போன் 160.9x74.4x8.1 மிமீ மற்றும் 175 கிராம் எடையையும் கொண்டுள்ளது.

ரியல்மி X7 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:

ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது வெண்ணிலா ரியல்மே எக்ஸ் 7 மடலுடன் ஒப்பிடும் போது சில வேறுபாடுகளுடன் வருகிறது. இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் விகிதத்துடன் கூடிய 6.55 இன்ச் புல் எச்டி + அமோலேட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

மேலும் இது 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் விகிதம், 91.6 சதவீதம் ஸ்கிரீன் டு பாடி ரேஷியோ மற்றும் 5 வது தலைமுறை கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு மற்றும் 1,200 நிட்ஸ் உச்சக்கட்ட ப்ரைட்னஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது ஆக்டா கோர் டைமன்சிட்டி 1000+ SoC மற்றும் 9-கோர் மாலி-ஜி 77 கிராபிக்ஸ் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் உடன் வருகிறது.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் எஃப் / 1.8 லென்ஸ் கொண்ட 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் + 8 மெகாபிக்சல் சென்சார் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் (எஃப் / 2.25) கேமரா + 2 -மெகாபிக்சல் பிளாக் அன்ட் ஒயிட் போர்ட்ரெயிட் கேமரா (எஃப் / 2.4) + எஃப் / 2.4 லென்ஸ் கொண்ட 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகியவைகள் உள்ள. முன்பக்கத்தில், எஃப் / 2.45 லென்ஸுடன் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

Oppo Reno 5 Pro மற்றும் Reno 5 அறிமுகம்; மெர்சலான விலை; மிரட்டும் ஸ்பெக்ஸ்!

ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 256 ஜிபி வரை யுஎஸ்எஃப் 2.1 ஸ்டோரேஜ் டர்போ ரைட் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, ரியல்மி எக்ஸ் 7 ஐப் போலவே உள்ளது, கூடுதலாக டூயல்-ப்ரெக்வென்சி ஜி.பி.எஸ்-ஐ கொண்டுள்ளது.

மேலும் இந்த ப்ரோ வேரியண்ட் ஆனது 4,500 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. சென்சார்களை பொறுத்தவரை, ரியல்மி எக்ஸ் 7 மாடலில் உள்ளதை போலவே geomagnetic sensor, ambient light sensor, proximity sensor, gyroscope மற்றும் accelerometer போன்றவைகள் உள்ளன. கடைசியாக அளவீட்டில் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 160.8x75.1x8.5 மிமீ மற்றும் 184 கிராம் எடையுள்ளதாக இருக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்