ஆப்நகரம்

Realme U1: இந்தியாவில் முதல் முறை விற்பனைக்கு வரும் ரியல்மீ யூ1

ஓப்போ நிறுவனத்தின் ரியல்மீ சீரிஸ் ஸ்மார்ட்போகளில் புதிய வரவாக Realme U1 மொபைல் நாளை முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. அமேசான் மூலம் விற்கப்படும் இந்த மொபைலை ரூ.11,999 முதல் வாங்கலாம்.

Samayam Tamil 4 Dec 2018, 8:19 pm
இந்த மொபைலில் முக்கியமான சிறப்பு அம்சம் கேமரா. 25MP செல்பி கேமராவுடன் 13MP+2MP டூயல் ரியர் கேமராவும் கொண்டிருக்கிறது. மேலும் MediaTek Helio P70 பிராசெஸர் கொண்ட முதல் மொபைல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil realme-u1-review-notch


இதன் 3GB RAM / 32GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.11,999க்கும் 4GB RAM / 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.14,999க்கும் விற்கப்படும். தற்போது இரண்டு நிறங்களில் கிடைக்கும் இந்த மொபைல் புத்தாண்டில் மற்றொரு புதிய வண்ணத்திலும் கிடைக்கும்.

அமேசான் இணையதளத்தில் டிசம்பர் 5ஆம் தேதி (நாளை) பகல் 12 மணிக்கு இந்த மொபைலுக்கான பிரத்யேக சேல் ஆரம்பிக்கிறது. அமேசானில் இந்த மொபைலை வாங்கும்போது ஸ்டேட் வங்கியின் 5% கேஷ்பேக் சலுகை, ஜியோவின் 4.2TB டேட்டா சலுகை ஆகியவற்றையும் பெறலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்