ஆப்நகரம்

Realme XT மீது அதிரடி விலைக்குறைப்பு; 3 மெமரி வேரியண்ட்களின் புதிய விலை நிர்ணயங்கள் இதோ!

Realme நிறுவனத்தின் மிகவும் பிரபலமான Realme XT ஸ்மார்ட்போனின் மீது விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பழைய விலை என்ன? எவ்வளவு விலை குறைக்கப்பட்டுள்ளது? புதிய விலை என்ன?

Samayam Tamil 4 Jan 2020, 3:49 pm
கடந்த 2019 ஆம் ஆண்டின் டாப் 10 ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் இடம்பிடித்திருந்த ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் ஆனது குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது குறைக்கப்பட்ட புதிய விலை நிர்ணயத்தின் கீழ் பிரபல இ-காமர்ஸ் தளமான ஃப்ளிப்கார்ட்டில் வாங்க கிடைக்கிறது.
Samayam Tamil Realme XT Price cut


இந்த ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போனின் அசல் விலை என்ன? தற்போது எந்த அளவிலான விலைக்குறைப்பை பெற்றுள்ளது? இந்த ஸ்மார்ட்போனின் பிரதான அம்சங்கள் என்ன? போன்ற கேள்விகளுக்கான பதில்கள் இதோ!

ஒருவழியாக Samsung Galaxy Note 10 Lite அறிமுகமானது; இதோ விலை & அம்சங்கள்!

கடந்த செப்டம்பர் 2019 இல் தொடங்கப்பட்ட ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போன் மீது தற்போது ரூ.1,000 என்கிற விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ஆனது தற்போது ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கிறது.

முன்னதாக இது ரூ.15,999 க்கு வாங்க கிடைத்தது என்பதும் முன்னரே குறிப்பிட்டபடி, ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போனின் திருத்தப்பட்ட விலையானது தற்போது ஃப்ளிப்கார்ட்டில் பிரதிபலிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேபோல், ரூ.16,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ஆனது இப்போது ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கிறது. மறுகையில் உள்ள ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ஆனது ரூ.18,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் இப்போது அது ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தவரை, இது 6.4 இன்ச் அளவிலான (1080x2340 பிக்சல்கள்) முழு எச்டி+ சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, மேலும் இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பையும் கொண்டுள்ளது. இது ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 712 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் டூயல் சிம் ஆதரவையும் கொண்டுள்ளது. ரியல்மி எக்ஸ்டி ஆனது பேர்ல் ஒயிட் மற்றும் பேர்ல் ப்ளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் மட்டுமே வாங்க கிடைக்கிறது.

Oppo Reno 3 & Reno 3 Pro அறிமுகம்! இனிமே ஒருத்தனும் ஒப்போ போன்களை கிண்டல் பண்ண முடியாது!

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 பை அடிப்படையிலான கலர்ஓஎஸ் 6.0 மூலம் இயங்குகிறது. ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய சிறப்பம்சங்களில் ஒன்று அதன் பின்பக்க கேமரா அமைப்பு ஆகும். அதில் 64 மெகாபிக்சல் அளவிலான (எஃப் / 1.8) முதன்மை பின்புற சென்சார் + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் + 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவைகள் அடக்கம்.

இதன் பின்புற கேமரா அமைப்பில் எல்இடி ஃபிளாஷ் ஒன்றும் உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை இது 16 மெகாபிக்சல் அளவிலான செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

Realme XT விமர்சனம்: நம்பி வாங்கலாமா? வேண்டாமா?

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆடியோ ஜாக் போன்ற அம்சங்களையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த ஸ்மார்ட்போ பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட ஒரு மிகப்பெரிய 4000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்