ஆப்நகரம்

இந்தியாவில் 2 புதிய Redmi Smart TV அறிமுகம்; இனி எல்லாருமே 43-இன்ச் டிவி வாங்கலாம்!

சியோமி நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன ரெட்மி நிறுவனம், இந்தியாவில் அதன் இரண்டு பட்ஜெட் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அவைகள் 32 இன்ச் மற்றும் 43 இன்ச் அளவுகளில் வருகின்றன. என்ன விலை, எப்போது விற்பனை, என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது, இதோ முழு விவரங்கள்.

Samayam Tamil 22 Sep 2021, 2:01 pm
இந்தியாவில் ரெட்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட் டிவிகளாக Redmi Smart TV 32 மற்றும் Redmi Smart TV 43 மாடல்கள் இன்று (செப்.22) அறிமுகமானது.
Samayam Tamil New Redmi Smart TV in India


இன்டர்நெட் இல்லாமல் ஒரு Smart TV-யில் என்னென்ன செய்யலாம்? செய்ய முடியாது?

இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் "ஆல்-ரவுண்ட் பொழுதுபோக்கு" மற்றும் டால்பி ஆடியோ, ஐஎம்டிபி ஒருங்கிணைப்பு மற்றும் கூகுள் அசிஸ்டென்ட் ஆதரவு உள்ளிட்ட பிரதான அம்சங்களை பேக் செய்கிறது.

Realme Next Launch: புது 32-இன்ச் டிவி, நார்சோ 50 சீரீஸ், ரியல்மி பேண்ட் 2 இந்தியாவுக்கு வருது!

மேலும் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள் டால்பி 5.1 சரவுண்ட் சவுண்ட் அனுபவத்தையும் வழங்குகின்றன மற்றும் சமீபத்திய பேட்ச்வால் ஸ்கின் மூலம் இயங்குகின்றன.

சியோமி நிறுவனம் அதன் புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்களை ஒரு புதிய Mi ரிமோட் உடன் அனுப்புகிறது. இதில் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் மற்றும் க்விக் ம்யூட் மற்றும் க்விக் வேக் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

லேட்டஸ்ட் ரெட்மி ஸ்மார்ட் டிவி 32 மற்றும் 43 மாடல்கள் சந்தேகமே இல்லாமல் ஒன்பிளஸ் டிவி ஒய் 32 மற்றும் 43 மற்றும் ரியல்மி ஸ்மார்ட் டிவி 32 மற்றும் 43 போன்றவற்றுடன் கடுமையாக போட்டியிடும்.

இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

ரெட்மி ஸ்மார்ட் டிவி 32 இன்ச் மாடல் - ரூ.15,999
ரெட்மி ஸ்மார்ட் டிவி 43 இன்ச் மாடல் - ரூ.25,999

இந்த 2 புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்களுமே அமேசான், Mi.com, Mi ஹோம் ஸ்டோர்ஸ் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் வழியாக நாட்டில் வாங்க கிடைக்கும்.

விற்பனையை பொறுத்தவரை, இது அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் 2021-இன் போது மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தின் போது Mi.com வழியாக விற்பனைக்கு வரலாம். ஆனால் தற்போது வரை பண்டிகை கால விற்பனையின் தேதிகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

ரெட்மி ஸ்மார்ட் டிவி 32, ரெட்மி ஸ்மார்ட் டிவி 43 மாடல்களின் அம்சங்கள்:

- இரண்டுமே ஆண்ட்ராய்டு டிவி 11-இல் பேட்ச்வால் 4 உடன் (அவுட் ஆப் பாக்ஸ்) வருகிறது
- ஐஎம்டிபி ஒருங்கிணைப்பு மற்றும் யுனிவர்சல் சர்ச், கிட்ஸ் மோட் மற்றும் லாங்குவேஜ் யுனிவர்ஸ் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது
- விவிட் பிக்சர் எஞ்சின் மற்றும் டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் மெய்நிகர்: எக்ஸ் ஆதரவு
- 20W ஸ்பீக்கர்ஸ்
- மேம்பட்ட ஆடியோ அனுபவத்திற்காக டால்பி 5.1 சரவுண்ட் சவுண்ட்
- இன்பில்ட் க்ரோம்காஸ்ட் மற்றும் கூகுள் அசிஸ்டென்ட் ஆதரவு
- பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் மற்றும் க்விக் மியூட் உள்ளிட்ட அம்சங்களுடன் கூடிய புதிய மி ரிமோட்
- ரிமோட்டில் ஒரு குயிக் வேக் அம்சமும் உள்ளது

- வயர்லெஸ் கனெக்டிவிட்டியை பொறுத்தவரை, டூயல் பேண்ட் வைஃபை மற்றும் ப்ளூடூத் வி 5.0
- லேட்டஸ்ட் மிராக்காஸ்ட் ஆப்
- ஆட்டோ லோ லேடென்சி மோட், இது கேம் கன்சோலுடன் டிவிகளைப் பயன்படுத்தும் போது லேடன்சி விகிதத்தைக் குறைக்க உதவுகிறது.
- இரண்டு HDMI, இரண்டு USB 2.0, AV, 3.5mm ஹெட்ஜாக், ஈதர்நெட் மற்றும் ஆண்டெனா போர்ட்

இரண்டு மாடல்களுக்கும் இடையிலான முக்கிய வேறுபாட்டின் அடிப்படையில், ரெட்மி ஸ்மார்ட் டிவி 32 ஆனது 32 இன்ச் எச்டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, அதேசமயம் ரெட்மி ஸ்மார்ட் டிவி 43 மாடல் ஆனது 43 இன்ச் Full எச்டி டிஸ்பிளேவுடன் வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்