ஆப்நகரம்

மொத்தம் 547 GB டேட்டா! இரவோடு இரவாக ஆட்டத்தை மாற்றிய ஜியோவின் 2020 Happy New Year பிளான்!

புத்தாண்டை மேலும் சிறப்பானதாக மாற்ற, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நேற்று இரவு தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அட்டகாசமான ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

Samayam Tamil 24 Dec 2019, 10:14 am
‘2020 இனிய புத்தாண்டு’ சலுகை என்கிற தலைப்பின் கீழ், ஜியோ அதன் ஸ்மார்ட்போன் மற்றும் அதன் ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கான ஸ்பெஷல் அன்லிமிடெட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
Samayam Tamil Jio 2020 New Year Plan


ஜியோ நிறுவனத்தின் இந்த புதிய அறிவிப்பானது அதன் தீபாவளி சலுகையை அறிமுகப்படுத்திய கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று, அதாவது 24 டிசம்பர் 2019 முதல் அணுக கிடைக்கும் ரிலையன்ஸ் ஜியோவின் '2020 இனிய புத்தாண்டு சலுகையின் விலை என்ன? டேட்டா நன்மைகள் என்ன? வேலிடிட்டி என்ன?

ஹே Jio... இந்த வாங்கிக்கோ BSNL-ன் சிக்ஸர்! இனி தினமும் 3 ஜிபி; வேலிடிட்டியை சொன்னா நம்புவீர்களா?

என்ன விலை? என்ன வேலிடிட்டி?

இந்த புதிய சலுகையின் கீழ் அணுக கிடைக்கும் திட்டத்தின் விலை ரூ.2,020 ஆகும். இந்த திட்டம் ஒரு வருடத்திற்கு (அதாவது 12 மாதங்களுக்கு) ‘வரம்பற்ற’ சேவைகளை வழங்கும். முன்னரே குறிப்பிட்டபடி ரிலையன்ஸ் ஜியோவின் இந்த புதிய திட்டம் டிசம்பர் 24, 2019 (இன்று) முதல் கிடைக்கும்.


நன்மைகள் பற்றி?

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த ‘2020 இனிய புத்தாண்டு சலுகை’ ஆனது ஸ்மார்ட்போன் மற்றும் ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. நன்மைகளை பொறுத்தவரை ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு, வரம்பற்ற குரல் (இலவச ஜியோ டூ ஜியோ அழைப்புகள் மற்றும் 1200 நிமிடங்கள் ஜியோ அல்லாத அழைப்புகள்), மொத்தம் 547.5 ஜிபி அளவிலான டேட்டா (அதாவது 1.5 ஜிபி அளவிலான தினசரி டேட்டா), தினமும் 1000 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ ஆப்களுக்கான இலவச அணுகல் ஆகியவைகள் கிடைக்கும். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள் ஆகும்.

Jio அதிரடி அறிவிப்பு! இனிமேல் Hotstar முற்றிலும் இலவசம்; எந்த திட்டத்தில்? யாருக்கெல்லாம் கிடைக்கும்?

அப்போது ஜியோ போன் பயனர்களுக்கு?

மறுகையில் பயனர்கள் ரூ.2,020 என்கிற ரீசார்ஜை நிகழ்த்துவதின் மூலம் ஒரு புதிய ஜியோபோன் மற்றும் 12 மாத காலத்திற்கான சேவையைப் பெற முடியும் என்று ரிலையன்ஸ் ஜியோ கூறுகிறது. நன்மைகளை பொறுத்தவரை, ஜியோ போன் பயனர்கள் வரம்பற்ற குரல், ஒரு நாளைக்கு 0.5 ஜிபி அளவிலான டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்களுக்கான அணுகலை பெறுவார்கள். JioPhone பயனர்களுக்கான திட்டத்தின் செல்லுபடியாகும் காலமும் 12 மாதங்கள் ஆகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்