ஆப்நகரம்

ஜியோ வழங்கும் 10GB இலவச டேட்டா; உடனே உங்க Jio App-குள்ள போங்க!

5 நாட்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா என மொத்தம் 10ஜிபி அளவிலான இலவச டேட்டா வழங்கும் ஜியோ சலுகை உங்களுக்கு கிடைக்குமா? செக் செய்வது எப்படி?

Samayam Tamil 2 Jun 2020, 8:52 am
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மீண்டும் தனது பயனர்களுக்கு இலவசமாக கூடுதல் டேட்டா சலுகையை வழங்கி உள்ளது.
Samayam Tamil Jio Free Data Offer


இந்த சலுகையின் வழியாக ஒருவரை தினமும் 2ஜிபி அளவிலான டேட்டாவை மொத்தம் 5 நாட்களுக்கு பெறலாம், அதாவது மொத்தம் 10 ஜிபி அளவிலான டேட்டாவை இலவசமாக பெறலாம் என்று அர்த்தம். இந்த சலுகை உங்களுக்கு கிடைத்துள்ளாதா இல்லையா என்பதை ஜியோ ஆப்பில் உள்ள மை பிளான்ஸ் வழியாக ஒருவர் அறிந்து கொள்ள முடியும்.

இந்த இலவச டேட்டா சலுகைக்காக ஜியோ நிறுவனம் எந்த வகையான தகுதிகள் மற்றும் வழிமுறைகளையும் பின்பற்றவில்லை. இந்த சலுகை "சீரற்ற முரையில்" ஒரு சில பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

லாக்டவுன் முடிஞ்சதும் புது போன் வாங்கலாம்னு நினைச்சீங்களா? ஐயோ பாவம்!

கொரோனா வைரஸ் லாக்டவுனின் போது வாடிக்கையாளர்களின் துயரங்களைத் தணிக்க ஜியோ இந்த சிறிய இலவசத்தை அளித்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

ஏனெனில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இதேபோன்ற ஒரு சலுகையை ஜியோ நிறுவனம் வெளியிட்டது. அத வழியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி அளவிலான தினசரி டேட்டாவை மொத்தம் நான்கு நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கியது.

10ஜிபி இலவச டேட்டாவிற்கு முன் அறிவிக்கப்பட்ட ஜியோவின் டபுள் டேட்டா சலுகை!

சமீபத்தில் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட்டின் வருடாந்திர சந்தா திட்டங்களானது இனிமேல் "டபுள் டேட்டா" நன்மையை வழங்கும் என்று ஜியோநிறுவனம் அறிவித்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்கள் ஆனது இரட்டிப்பு டேட்டா நன்மைகளை வழங்கும். இந்த புதிய நன்மைகள் ஏற்கனவே நிறுவனத்தின் இணையதளத்தில் பிரதிபலிக்கிறது.

ஜியோ நிறுவனத்தின் அதிகாரபூர்வமான வலைத்தளத்தின்படி, JioFiber ப்ரான்ஸ் மாதாந்திர திட்டமானது முன்னதாக 250GB அளவிலான டேட்டாவை வழங்கியது. தற்போது அது 350 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். இதேபோல், ஜியோ ஃபைபர் சில்வர் மாதாந்திர திட்டம் இப்போது 800 ஜிபி வரையிலான வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது.

வோடபோன் அண்ணே.. நீங்களுமா? அதுவும் Jio, Airtel கூட; ரொம்ப சந்தோசம்!

இதேபோல் கோல்ட் பிளான் இப்போது 250 எம்.பி.பி.எஸ் வேகத்தின்கீழ் மாதத்திற்கு 1,750 ஜிபி வரையிலான வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. டயமண்ட் பிளான் இப்போது 500 எம்.பி.பி.எஸ் என்கிற வேகத்தின் கீழ் மாதத்திற்கு 4,000 ஜிபி அளவிலான வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. இறுதியாக, 1 ஜி.பி.பி.எஸ் வேகத்தின் கீழ் 7,500 ஜிபி அளவிலான டேட்டாவை மிக விலையுயர்ந்த பிளாட்டினம் திட்டம் உள்ளது.

டேட்டாவை தவிர்த்து, மேற்கூறப்பட்ட அனைத்து ஜியோ ஃபைபர் திட்டங்களும் சில இலவச நன்மைகளும் வழங்குகின்றன. இந்தியா முழுவதும் இலவச ஜியோ வாய்ஸ் அணுகல், ஆண்டுக்கு ரூ.1,200 மதிப்புள்ள டிவி வீடியோ காலிங் கான்பிரன்ஸ் சலுகைகள், வீட்டு நெட்வொர்க்கிங் உடன் ஸீரோ-டிலே கேமிங் அனுபவம் போன்றவைகளையும் பயனர்கள் பெறலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்