ஆப்நகரம்

டாப் டக்கர் ஸ்பீட்! ஜூன் மாசமும் ஜியோ தான் வின்னர்; ஓரங்கட்டிய ஏர்டெல், வோடா!

ஜூன் மாதத்தில் சராசரியாக 16 5 எம்.பி.பி.எஸ் பதிவிறக்க வேகத்துடன் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி வேக அட்டவணையில் முதலிடத்தில் உள்ளது.

Samayam Tamil 24 Jul 2020, 8:09 pm
கடந்த ஜூன் மாதத்தில் சராசரியாக 16.5 மெகாபைட் (எம்.பி.பி.எஸ்) பதிவிறக்க வேகத்துடன் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ 4ஜி வேக தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மறுகையில் உள்ள வோடபோன் மற்றும் ஐடியா பதிவேற்ற வேகமும் முன்னணியில் இருந்தன என்று டிராய் தரவு தெரிவிக்கிறது.
Samayam Tamil Jio Airtel Vodafone 4G Speed


ஐடியா நிறுவனமானது 8 எம்.பி.பி.எஸ் வேகத்துடன் பதிவிறக்க வேக அட்டவணையில் ஜியோவிற்கு அடுத்த இடத்தில் உள்ளது. இந்த தகவல் டிராயின் மைஸ்பீட் போர்ட்டலில் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவின் வழியாக அறியப்படுகிறது.

அடுத்த Lock Down-னுக்கு முன் உஷாரா இதை செஞ்சிருங்க; முக்கியமா Work From Home செய்றவங்க!

மேலும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ள தரவின்படி, கடந்த ஜூன் மாதத்தில் வோடபோன் மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி நெட்வொர்க்கில் சராசரியாக 7.5 எம்.பி.பி.எஸ் மற்றும் 7.2 எம்.பி.பி.எஸ் பதிவிறக்க வேகம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பதிவேற்றும் வேகத்தை பொறுத்தவரை, வோடபோன் மற்றும் ஐடியா ஆகியவை ஒவ்வொன்றும் 6.2 எம்.பி.பி.எஸ் வேகத்துடன் தரவரிசையில் முன்னிலை வகித்தன. ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் சராசரியாக 3.4 எம்.பி.பி.எஸ் என்கிற பதிவேற்ற வேகத்தை பதிவு செய்துள்ளன. .

பதிவிறக்கம் வேகம் என்பது மற்றவர்கள் அனுப்பிய செய்திகள், படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை அணுக உதவுகிறது, பதிவேற்ற வேகம் என்பது சந்தாதாரர்களுக்கு அவர்களின் தொடர்புகளுக்கு செய்திகள், படங்கள் போன்றவற்றை அனுப்ப உதவுகிறது.

வோடபோன் மற்றும் ஐடியா ஆகியவை தங்கள் மொபைல் வணிகத்தை ஒன்றிணைத்துள்ளன, ஆனால் வணிக ஒருங்கிணைப்பு நிலுவையில் இருப்பதால் நிறுவனங்கள் தொடர்ந்து தங்கள் 4ஜி வேக விவரங்களை தனித்தனியாகவே பதிவு செய்கின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

நீங்க ஏர்டெல் பயனரா? உஷார்.. ஏனென்றால் 12 லட்சம் பேர் "தெறித்து" ஓடி விட்டனர்!

ஆகமொத்தம் மார்ச் - ஏப்ரல் காலகட்டத்தில் இருந்த தொலைதொடர்பு ஆபரேட்டர்களின் டேட்டா வேகம் ஜூன் மாதத்தில் அதிகரித்துள்ளது. இந்த இடத்தில் லாக்டவுன் காலத்தில், ஜியோவின் பதிவிறக்க வேகம் 13.3 எம்.பி.பி.எஸ் வரை குறைந்ததும், வோடபோன் ஆனது 5.6 எம்.பி.பி.எஸ் ஆக சரிந்ததும் ஏர்டெல் நிறுவனமானது 5.5 எம்.பி.பி.எஸ் மற்றும் ஐடியா நிறுவனமானது 5.1 எம்.பி.பி.எஸ் வரை உருண்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்