ஆப்நகரம்

பன்றியின் உடலிலிருந்து அகற்றியும் உயிருடன் இருந்த மூளை - ஆராய்ச்சியில் சாதனை

அமெரிக்கா யாழ் பல்கலைக்கழகத்தில் பன்றிகளின் மூளையை பல மணிநேரம் உயிருடன் இருக்க ஆய்வகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர்.

Samayam Tamil 28 Apr 2018, 4:37 pm
அமெரிக்கா யாழ் பல்கலைக்கழகத்தில் பன்றிகளின் மூளையை பல மணிநேரம் உயிருடன் இருக்க ஆய்வகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர்.
Samayam Tamil pig


ஆய்வகத்தில் பன்றியின் தலையை துண்டித்து கொல்லப்பட்டு அதன் மூளையை உயிருடன் வைத்திருக்க ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் படி பன்றியின் உடலிலிருந்து அகற்றப்பட்ட மூளை அதன் உடல் வெப்பநிலையை பராமரிக்க ஹீட்டரும், அதை உயிருடன் வைக்க சீரான ரத்தம் பம்ப் மூலம் செலுத்தப்பட்டது.

இவ்வாறு ஆய்வகத்தில் வைக்கப்பட்ட மூளை 36 மணிநேரம் உயிருடன் இருந்துள்ளது.

இதுகுறித்து பேராசிரியர் செஸ்டான் தலைமையிலான விஞ்ஞானிகள் கூறுகையில், “மனிதனுக்கு மூளை மாற்று அறுவை சிகிச்சை செய்ய இது தொடக்க வெற்றி. தற்போது 100 பன்றிகளின் மூளைகள் இப்படி ஆய்வு செய்து வருகிறோம்.” என தெரிவித்துள்ளனர்

அடுத்த செய்தி

டிரெண்டிங்