ஆப்நகரம்

Samsung Foldable Phone: சாம்சங்கின் மடக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ’கேலக்ஸி F’ அறிமுகம்!

சாம்சங் நிறுவனத்தின் மடக்கக்கூடிய ஸ்மார்ட்போனான கேலக்ஸி F இன்று இரவு 11.30 மணிக்கு சான்பிரான்சிஸ்கோவில் இருந்து அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Samayam Tamil 8 Nov 2018, 5:45 pm
சாம்சங் நிறுவனத்தின் மடக்கக்கூடிய ஸ்மார்ட்போனான கேலக்ஸி F இன்று இரவு 11.30 மணிக்கு சான்பிரான்சிஸ்கோவில் இருந்து அறிமுகம் செய்யப்பட உள்ளது.
Samayam Tamil ftft


சாம்சங் நிறுவனத்தின் அடுத்த அதிரடி மாடல் போனானகேலக்ஸி F,இன்று சான்பிரான்சிஸ்கோநகரில் சாம்சங் நிறுவனமாநாட்டில் வெளியாக உள்ளது. இந்த நிகழ்வானதுசாம்சங் நிறுவனத்தின் அதிர்காரபூர்வ யூடியூபில் லைவாகஒளிபரப்பாக உள்ளது.

ஸ்மார்ட்போனின் அம்சங்கள் :

இது மடக்கப்பட்ட நிலையில் 4-இஞ்ச் ஸ்மார்ட்போனாகவும், திறந்த நிலையில் 7-இஞ்ச் டேப்லெட் போன்றும் இயங்கும். முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஸ்மார்ட்போனில் இரண்டு OLED பேனல்களை வழங்க இருப்பதாக சாம்சங் தெரிவித்து இருந்தது. இதன் முதன்மை டிஸ்ப்ளே 7.29 இஞ்ச் ஆகவும், இரண்டாவது டிஸ்ப்ளே 4.58 இஞ்ச் ஆகவும் இருக்கும். பேனல் அளவு 7.3 இஞ்ச் மற்றும் 4.6 இஞ்ச் ஆக இருக்கிறது.


இதனால் புதிய மடக்கக்கூடிய சாதனத்தை ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் என இருவிதங்களில் பயன்படுத்த முடியும். இந்த சாதனத்தின் உற்பத்தி நவம்பர் மாதத்தில் துவங்கும் என கூறப்படுகிறது . முதற்கட்டமாக ஆண்டிற்கு ஐந்து முதல் பத்து லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்ய சாம்சங் திட்டமிட்டுள்ளது.

7 இஞ்ச் டிஸ்பிளே,இரண்டு சிம்கார்டுகள் போடும் வசதி, மற்றும் 512 ஜிபி இன்டெர்நெல் ஸ்டோரேஜ் கொண்டது. இதன் விலை தோராயமாக ரூ. 1,09,432 ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்