ஆப்நகரம்

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி A51 மீதும் விலைக்குறைப்பு; என்ஜாய்!

சாம்சங் கேலக்ஸி ஏ71 மாடலின் மீது விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்ட சில நேரத்திலேயே சாம்சங் கேலக்ஸி ஏ51 மாடல் மீதான விலைக்குறைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 11 Sep 2020, 6:29 pm
இந்தியாவில், சாம்சங் நிறுவனத்தின் மிட்-ரேன்ஜ் பிரீமியம் மாடல்களில் ஒன்றான கேலக்ஸி ஏ51 மீது விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ71 உடன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி ஏ51 மாடலானது இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்கள் கீழ் அறிமுகமானது.
Samayam Tamil Samsung Galaxy A51


இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி A71 மீது அதிரடி விலைக்குறைப்பு!

புதிய விலைகளை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி ஏ 51 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.25,250-லிருந்து ரூ .23,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட்டை பொறுத்தவரை, அதன் விலை இப்போது ரூ .25,999 ஆக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ 51 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

அம்சங்களை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி ஏ51ஆனது 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.5 இன்ச் அளவிலான சூப்பர் அமோலேட் இன்பினிட்டி-ஓ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, மேலும் இது மாலி-ஜி 72 ஜி.பீ.யுடன் 2.3GHz ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 9611 ப்ராசஸர் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது. மேலும் இது மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 512 ஜிபி வரை மெமரி நீட்டிப்பிற்கான ஆதரவையும் கொண்டுள்ளது.

கேமராத்துறையை பொறுத்தவரை, கேலக்ஸி A51 ஆனது க்வாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, அதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் + 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா + 5 மெகாபிக்சல் அளவிலான டெப்த் சென்சார் உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை 32 எம்பி அளவிலான செல்பீ கேமரா உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4000mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. உடன் இது 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 10 ஐ அடிப்படையாகக் கொண்ட சாம்சங் ஒன் யுஐ 2.0 மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் VoLTE, Wi-Fi 802.11 ac, ப்ளூடூத் 5.0, A-GPS உடன் GPS, GLONASS மற்றும் ஒரு USB Type-C போர்ட் போன்ற இணையப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

ரூ.25,000 க்குள் வாங்க கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள் (செப். 2020 எடிஷன்)

அளவீட்டில் இந்த ஸ்மார்ட்போன் 158.5 x 73.6 x 7.9 மிமீ மற்றும் 172 கிராம் எடையைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரும் உள்ளது.

இதற்கு சற்று முன்னதாக கேலக்ஸி ஏ 71 ஸ்மார்ட்போன் மீதும் விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் சிங்கிள் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜின் மீது விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சாம்சங் கேலக்ஸி ஏ 71 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.30,999 என்கிற விலைக்கு விற்பனையாகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.32,999 ஆக இருந்தது. அதாவது தற்போது ரூ.2000 என்கிற விலைக்குறைப்பை பெற்றுள்ளது.

கேலக்ஸி ஏ 71 ஸ்மார்ட்போனின் திருத்தப்பட்ட விலையானது நிறுவனத்தின் சொந்த சாம்சங்.காம், பிரபல இகாமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் ஏற்கனவே பிரதிபலிக்கிறது மற்றும் ஆஃப்லைன் கடைகளிலும் கூடிய விரைவில் திருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்