ஆப்நகரம்

சாம்சங் மடிப்பு மொபைல் இந்தியாவில் வெளியாகும் தேதி

அண்மையில் சாம்சங் நிறுவனம் மாதம் தோறும் குறைந்தது ஒரு மொபைலை இந்தியாவில் வெளியிடப்போவதாக அறிவித்தது நினைவூட்டத்தக்கது.

Samayam Tamil 19 Apr 2019, 6:12 pm
சாம்சங் அண்மையில் அறிமுகம் செய்திருக்கும் மடிக்கக்கூடிய ஸ்டார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வரும் நாள் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.
Samayam Tamil BezgeTppr32wovgyJTwbeH-1200-80


2019 மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடைபெற்றபோது சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஃபோல்டு (Galaxy Fold) மொபைலை அறிமுகம் செய்தது. இதன் மூலம் உலகின் முதல் மடிப்பு மொபைல்போனை அறிமுகம் செய்த பெருமையைச் சொந்தமாக்கியது.

இந்திய மதிப்பில் இதன் விலை 1.50 லட்சம் ரூபாய் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த மொபைல் கேலக்ஸி ஏ80 (Galaxy A80) ஸ்மார்ட்போனுடன் மே மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனில் 7.3 இன்ச் QXGA பிளஸ் டைனமிக் AMOLED 4.2:3 இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளே (infinity flex display) உள்ளது. மடிக்கக்கப்பட்ட நிலையில் 4.6 இன்ச் அளவில் உள்ள இது திறக்கப்பட்ட நிலையில் 7.3 இன்ச் இருக்கும்.

ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 12GB RAM, 2 ரியர் கேமராக்கள், 2 செல்ஃபி கேமராக்கள் மற்றும் முன்புற கவர் டிஸ்ப்ளேயுடன் 10MP கேமரா என பல்வேறு அம்சங்கள் உள்ளன. 4380mAh திறன் கொண்ட பேட்டரி கொண்டது. வயர்லெஸ் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த மொபைலுடன் கிடைக்கும்.

அண்மையில் சாம்சங் நிறுவனம் மாதம் தோறும் குறைந்தது ஒரு மொபைலை இந்தியாவில் வெளியிடப்போவதாக அறிவித்தது நினைவூட்டத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்