ஆப்நகரம்

வெறும் ரூ.9,999 க்கு புதிய சாம்சங் கேலக்ஸி போன்; ரெடியா இருங்க!

Samsung நிறுவனத்தின் Galaxy M11 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 30 Mar 2020, 11:24 am
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்11 என்ற புதிய ஸ்மார்ட்போனின் மீது பணியாற்றி வருவதாக கூறப்பட்டது. தற்போது அது உண்மைதான் என்று நிரூபிக்கும் வண்ணம், வரவிருக்கும் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் முக்கிய அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.
Samayam Tamil Samsung Galaxy M11


இந்த ரெண்டர்கள் மற்றும் அம்சங்களானது YTTECHB வழியாக லீக் ஆகியுள்ளன. மேலும் வெளியான புகைப்படத்தில் கூறப்படும் கேலக்ஸி எம்11 ஆனது கருப்பு, ஊதா மற்றும் ஸ்கை ப்ளூ போன்ற மூன்று வண்ண விருப்பங்களில் காட்சிப்படுத்துகிறது.

Vodafone : வெறும் ரூ.95 க்கு 2 மாதத்திற்கு டேட்டா, டால்க் டைம் & ரேட் கட்டர்!

உடன் இந்த ஸ்மார்ட்போன் இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளே, ட்ரிபிள் கேமரா அமைப்பு போன்ற பிரதான அம்சங்களை கொண்டு வரும் என்பதையும் ரெண்டர்கள் வெளிப்படுத்துகின்றன.

மற்ற அம்சங்களை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எம்11 ஆனது 6.4 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளேவுடன் அறிமுகம் ஆகலாம், அது 1560 x 720 பிக்சல்கள் என்கிற ஸ்க்ரீன் ரெசல்யூஷனை கொண்டிருக்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன் 1.8GHz ஆக்டா கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது, அதாவது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 450 ப்ராசஸர் மற்றும் 506 ஜி.பீ.யு கொண்டு இயங்கும்.

புதிய சாம்சங் கேலக்ஸி எம்11 ஆனது 3 ஜிபி ரேம் + 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜில் கிடைக்கும். மெமரி நீடிப்பை பொறுத்தவரை, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 512 ஜிபி வரை விரிவாக்கலாம்.

கேமராத்துறையை பொறுத்தவரை, இதில் ட்ரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. அதில் 13 எம்பி அளவிலான (எஃப் / 1.8) முதன்மை கேமரா + 5 மெகாபிக்சல் அளவிலான (எஃப் / 2.2) வைட் ஆங்கிள் கேமரா + 2 மெகாபிக்சல் அளவிலான டெப்த் கேமரா ஆகியவைகள் இடம்பெறலாம். முன்பக்கத்தை பொறுத்தவரை, ஒரு 8 மெகாபிக்சல் அளவிலான (எஃப் / 2.0) செல்பீ கேமரா உள்ளது.

Mi 10 Lite : உலகின் Cheapest 5G Phone-ஐ அறிமுகம் செய்தது சியோமி!

சாம்சங் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போனின் இந்த மொத்த அமைப்பும் ஒரு 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது மற்றும் அது 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த ஒன்யூஐ 2.0 கொண்டு இயங்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன், சூப்பர் பட்ஜெட் விலைப்பிரிவின் கீழ் அறிமுகம் ஆகும் என்று எதிர்பார்க்கலாம், அதாவது (கிடைக்கப்பெற்ற வதந்திகளின்படி) இது ரூ.9999 க்கு வாங்க கிடைக்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்