ஆப்நகரம்

சாம்சங் கேலக்ஸி M51 vs சாம்சங் கேலக்ஸி M31s: இரண்டில் எது பெஸ்ட்?

சாம்சங் கேலக்ஸி எம்51 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்31எஸ்.. என்னென்ன வித்தியாசங்கள்? எது சிறந்த ஸ்மார்ட்போன்?

Samayam Tamil 10 Sep 2020, 8:43 pm
சாம்சங் நிறுவனம் அதன் எம் சீரிஸின் கீழ் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அது கேலக்ஸி எம் 51 மாடல் ஆகும். இந்திய சந்தையில் ரூ.24,999 என்கிற விலைக்கு இன்று அறிமுகமாகி உள்ள இந்த ஸ்மார்ட்போன் கடந்த மாதம் வெளியான கேலக்ஸி எம் 31 எஸ், ரெட்மி நோட் 9 ப்ரோ, ரியல்மி 6 ப்ரோ போன்ற ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடுகிறது. என்ன கேலக்ஸி எம் 31 எஸ் உடன் போட்டியிடுகிறதா?
Samayam Tamil samsung galaxy m51 vs samsung galaxy m31s what is different which is better value for the money
சாம்சங் கேலக்ஸி M51 vs சாம்சங் கேலக்ஸி M31s: இரண்டில் எது பெஸ்ட்?


கேமராக்கள், வன்பொருள், டிஸ்பிளே மற்றும் பலவற்றின் அடிப்படையில் மேம்பட்ட அம்சங்களை பேக் செய்வதால் M51 உயர்ந்ததாகவே தோன்றுகிறது. இருப்பினும் பெரும்பாலான வாசகர்கள் "Samsung Galaxy M51 vs Galaxy M31s" என்கிற ஒப்பீட்டை அதிகம் தேடுவதால், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் இங்கே ஒப்பிட்டு பார்க்கவுள்ளோம், வாருங்கள்.

01. விலை - சாம்சங் கேலக்ஸி எம்51 vs சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் :

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம் 51 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் வேரியண்ட் ஆனது ரூ.24,999 என்றும், அதன் 8 ஜிபி ரேம் விருப்பமானது ரூ.26,999 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எலக்ட்ரிக் ப்ளூ மற்றும் செலிஸ்டியல் பிளாக் கலர் விருப்பங்களில் வருகிறது.

மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ் ஸ்மார்ட்போனின் 6GB ரேம் + 128GB மாடலானது ரூ.19,499 கும் இதன் 8GB ரேம் + 128GB மாடலானது ரூ.21,499 க்கும் வாங்க கிடைக்கிறது.இது மிரேஜ் ப்ளூ மற்றும் மிரேஜ் பிளாக் வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கிறது.


ரூ.40,000 க்குள் வாங்க கிடைக்கும் டாப் 5 பிரீமியம் ஸ்மார்ட்போன்கள்!

02. டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி எம்51 vs சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் :

சாம்சங் கேலக்ஸி எம் 51 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் அளவிலான புல் எச்டி + சூப்பர் அமோலேட் + இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. ஹோல் பஞ்ச் கட்அவுட் ஆனது டிஸ்பிளேவின் மேல் மையத்தில் அமைந்துள்ளது மற்றும் அதில் ஒரு செல்பீ கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ் ஆனது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ஒன் யுஐ கொண்டு இயங்குகிறது. இது 6.5 இன்ச் அளவிலான புல் எச்டி+ சூப்பர் அமோலேட் இன்பினிட்டி-ஓ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, அது 420 நைட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

03. ப்ராசஸர் & ஸ்டோரேஜ்: சாம்சங் கேலக்ஸி எம்51 vs சாம்சங் கேலக்ஸி எம்31எஸ்:

இந்த ஸ்மார்ட்போன் octa-core Qualcomm Snapdragon 730G SoC மூலம் இயக்கப்படுகிறது உடன் 8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது மைக்ரோ எஸ்டி கார்டைப் பயன்படுத்தி (512ஜிபி வரை) விரிவாக்கக்கூடிய ஆதரவுடன் 128 ஜிபி உவரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் Android 10 ஐ அடிப்படையாகக் கொண்ட நிறுவனத்தின் சொந்த OneUI மூலம் இயங்குகிறது.

மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ் 8 ஜிபி ரேம் உடன் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9611 SoC உடன் இயங்குகிறது. இந்த ஆக்டிவ் சிப் குறிப்பாக கேலக்ஸி எம் 31 மற்றும் கேலக்ஸி எம் 30 எஸ் ஸ்மார்ட்போன்களில் நாம் பார்த்ததைப் போன்றது.

04. கேமராக்கள்: சாம்சங் கேலக்ஸி எம்51 vs சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் :

கேமராக்களை பொறுத்தவரை, 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்பு (எஃப் / 1.8 லென்ஸ்) உள்ளது. உடன் 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் (123 டிகிரி பீல்ட் ஆப் வியூ) + 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவைகளையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், செல்பீக்களுக்காக ஒரு 32 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ் ஸ்மார்ட்போனில் குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் 64 மெகாபிக்சல் முதன்மை சோனி ஐஎம்எக்ஸ் 682 சென்சார் எஃப் / 1.8 லென்ஸுடன் உள்ளது. உடன் 12 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் (123 டிகிரி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்) + 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் + 5 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகியவைகள் உள்ளன.

செல்பீக்களை கைப்பற்றவும், வீடியோ அழைப்புகளை இயக்கவும், சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ் ஸ்மார்ட்போனில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார் உள்ளது. அது ஹோல் பஞ்ச் டிஸ்பிளே வடிவமைப்பின் மேல் அமர்ந்திருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா சென்சார் 4 கே வீடியோ பதிவு மற்றும் ஸ்லோ-மோ வீடியோக்கள், ஏஆர் டூடுல் மற்றும் ஏஆர் ஈமோஜி போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது.


Poco M2 இந்தியாவில் அறிமுகமானது; தாறுமாறான ஸ்பெக்ஸ்; தரமான விலை!


05. கனெக்டிவிட்டி - சாம்சங் கேலக்ஸி எம்51 vs சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் :

சாம்சங் கேலக்ஸி எம் 51 மாடலின் இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக் போன்றவைகளை கொண்டுள்ளது. இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாரை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ்-ல் 128 ஜிபி உள் சேமிப்பு உள்ளது, இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக விரிவாக்கக்கூடியது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது.

06. பேட்டரி - சாம்சங் கேலக்ஸி எம்51 vs சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் :

சாம்சங் கேலக்ஸி எம் 51 ஆனது 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் 7,000 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. இதனுடன் தொகுக்கப்பட்ட சார்ஜரைப் பயன்படுத்தி 115 நிமிடங்களில் 0 முதல் 100 சதவீதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்யலாம் என்று சாம்சங் நிறுவனம் கூறுகிறது. கடைசியாக இது 213 கிராம் என்கிற எடையை கொண்டுள்ளது.

மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ் ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. இது 6,000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் இது தொகுக்கப்பட்ட 25W சார்ஜர் வழியாக பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினையும் கொடுள்ளது. கடைசியாக அளவீட்டில் இது 9.3 மிமீ தடிமன் உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்