ஆப்நகரம்

அதுக்குள்ள அடுத்த Foldable Smartphone ரெடி; தீயாக வேலை செய்யும் Samsung!

சாம்சங் நிறுவனம் ஒரு புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை... சாம்சங் டபிள்யூ 21 5ஜி என்கிற பெயரின் கீழ்... வருகிற நவம்பர் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Samayam Tamil 30 Oct 2020, 4:03 pm
சாம்சங் டபிள்யூ 21 5ஜி போல்டபிள் ஸ்மார்ட்போன் வருகிற நவம்பர் 4 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் முன்பு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி இசட் போல்ட் 2-க்கு ஒத்ததாக இருக்கிறது.
Samayam Tamil Samsung Galaxy Fold 2


iPhone 12, iPhone 12 Pro இந்திய விற்பனை ஸ்டார்ட்; என்னென்ன ஆபர்? இதோ முழு லிஸ்ட்!

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கிடையேயான குறிப்பிடத்தக்க வேறுபாடு என்னவென்றால், W21 5G ஆனது 5ஜி இணைப்பிற்காக சீனா டெலிகாம் கேரியருடன் இணைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, நிறுவனம் இதேபோன்ற முறையின் கீழ் சாம்சங் டபிள்யூ 20 5ஜி மாடலை அறிமுகப்படுத்தியது. சாம்சங் டபிள்யூ 20 5ஜி என்பது கேலக்ஸி போல்ட் ஸ்மார்ட்போனின் 5ஜி-ரெடி பதிப்பாகும், இது ஸ்னாப்டிராகன் 855 SoC க்கு பதிலாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 855+ SoC மூலம் இயக்கப்படுகிறது.

புது ஐபோன் வாங்க.. பழைய போனை கொடுத்தா எவ்வளவு எக்ஸ்சேன்ஜ் ஆபர் கிடைக்கும்?

சாம்சங் டபிள்யூ 21 5ஜி சமீபத்தில் தரச்சான்றிதழ் தளமான TENAA-வில் காணப்பட்டது மற்றும் அது முக்கிய அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் பற்றிய விவரங்களையும் வழங்குகிறது.

சாம்சங் W21 5G ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி:

பிரபல டிப்ஸ்டர், சாம்சங் டபிள்யூ 21 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு போஸ்டர் ஒன்றை சீன சமூக ஊடகத்தளமான வெய்போவில் வெளியிட்டார். அதன்படி இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் 4 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகும். இந்த வெளியீட்டு நிகழ்வு உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு) தொடங்கும்.

இந்த ஸ்மார்ட்போனின் விலை பற்றிய விவரங்களில் தெளிவு இல்லை, இருப்பினும், சாம்சங் டபிள்யூ 21 5 ஜி சீனா டெலிகாம் கேரியருடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே சாம்சங் டபிள்யூ 21 5ஜி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி இசட் போல்ட் 2 உடன் ஒத்ததாக இருக்கலாம்.

சாம்சங் W21 5G ஸ்மார்ட்போனில் (எதிர்பார்க்கப்படும்) அம்சங்கள்:

இதில் 7.53 இன்ச் அளவிலான (1,768x2,208 பிக்சல்கள்) டிஸ்ப்ளே இடம்பெற வாய்ப்புள்ளது. இதில் 6.23 இன்ச் (816x2,260 பிக்சல்கள்) கவர் டிஸ்ப்ளேவும் இருக்கலாம். இது 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி சேமிப்பகத்துடன் ஸ்னாப்டிராகன் 865+ SoC மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்புறத்தில், சாம்சங் டபிள்யூ 21 5ஜி ஸ்மார்ட்போன் மூன்று 12 மெகாபிக்சல் சென்சார்களை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுருக்கலாம். முன்பக்கத்தை பொறுத்தவரை, இது 12 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டிருக்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இது டூயல் செல் பேட்டரியை (2,090mAh + 2,160mAh) பேக் செய்யலாம். கடைசியாக இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 288 கிராம் எடை மற்றும் 128.2x159.2x6.2 மிமீ அளவையும் கொண்டிருக்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்