ஆப்நகரம்

சாம்சங்கில் 40% தள்ளுபடி: டிவி, பிரிட்ஜ் என அனைத்துப் பொருட்களுக்கும் விலை குறைப்பு!

சாம்சங்கில் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி, என அத்தனை வீட்டு உபயோகப் பொருட்களுக்கும் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விபரங்களை இங்கு காணலாம்.

Samayam Tamil 25 Jul 2019, 6:33 pm
சாம்சங்கில் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி, என அத்தனை வீட்டு உபயோகப் பொருட்களுக்கும் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விபரங்களை இங்கு காணலாம்.
Samayam Tamil samsung 40 percent offer


சாம்சங்கில் கடந்த 18ம் தேதி மான்சூன் சேல் என்ற பெயரில் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டது. இந்த ஆஃபர் தற்போது முடிவடைந்த நிலையில், குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டும் மீண்டும் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் www.samsung.com என்ற சாம்சங் நிறுவனத்தின் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் ஆஃபர் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

டிவி:
சாம்சங்கில் பட்ஜெட் விலைக்கு ஏற்றவாறு, 32 இன்ச் சாதாரண எல்இடி டிவி 21,900 ரூபாயிலிரு்து 14,990 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதே போல் 28,900 ரூபாய் மதிப்புள்ள 32 இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை 20,990 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அசல் விலையிருந்து 27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

வீட்டு உபயோகப் பொருட்கள்:
சாம்சங் வாஷிங் மெஷின், பிரிட்ஜ், மைக்ரோ வேவ் ஒவ்ன், ஏசி ஆகியவற்றுக்கு இந்த சிறப்பு விற்பனையில் அதிகபட்சமாக 31 சதவீதம் வரையில் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க விலையாக சிங்கிள் டோர் 3 ஸ்டார் பிரிட்ஜ் வெறும் 13,790 ரூபாய்க்கு கிடைக்கிறது. சாதாரண நாட்களில் இதன் விலை 18,250 ரூபாய். இதற்கு 10 வருட வாரண்டியும் வழங்கப்படுகிறது.

இதே போல் 6.2 கிலோ ஆட்டோமெட்டிக் டாப் லோடு வாஷின் மெஷின் 10,350 ரூபாயாக உள்ளது. நீண்ட நாட்களாக வாஷிங் மெஷின் வாங்க நினைத்தவர்கள் இந்த ஆஃபரில் சாம்சங் வாஷிங் மெஷின் வாங்கிக் கொள்ளலாம். 47,100 ரூபாய் மதிப்புள்ள இன்வெர்ட்டர், தற்போது 33,990 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்