ஆப்நகரம்

அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க; ஜூன் முதல் வாரம் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு!

சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி A31 ஸ்மார்ட்போனை ஜூன் மாதத்தின் முதல் வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது!

Samayam Tamil 23 May 2020, 1:33 pm
சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில், அதன் கேலக்ஸி ஏ-சீரிஸின் கீழ் சாம்சங் கேலக்ஸி ஏ31 எனும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. தற்போது அந்த ஸ்மார்ட்போன் வரும் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil Samsung Galaxy A31


சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் சுமார் ரூ.23,000 என்கிற புள்ளியை எட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்கப்படும்.

Honor X10: நினைச்சு கூட பார்க்கல.. இப்படி ஒரு ஹானர் போன் அறிமுகம் ஆகும்னு!

மேலும் சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் ஆனது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஆன் போர்டு ஸ்டோரேஜ் என்கிற ஒரே ஒரு மாறுபாட்டில் வர வாய்ப்புள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேவுடன் வரும் என்றும், இது இந்தியாவில் மீடியாடெக் ஆக்டா கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனின் முழு அம்சங்கள்:

சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் அளவிலான புல் எச்டி+ இன்ஃபினிட்டி-யு சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 2400 x 1080 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மாலி-ஜி 52 ஜி.பீ.யு உடனான மீடியா டெக் ஹீலியோ பி 65 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது

இது 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அடிப்படையிலான ஒன் யுஐ 2.0 கஸ்டம் ஸ்கின் கொண்டு இயங்குகிறது.

ஒப்போ Find X2 சீரிஸின் கீழ் இன்னொரு மாடல் அறிமுகம்; ஆனால் இது வேற ரகம்!

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனில் க்வாட்-கேமராஅமைப்பு உள்ளது. அதில் 48 மெகாபிக்சல் அளவிலான ப்ரைமரி லென்ஸ் (எஃப் / 1.2) + 123 டிகிரி எஃப்ஒவி கொண்ட 8 மெகாபிக்சல் அளவிலான வைட் ஆங்கிள் லென்ஸ் + 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் + 5 மெகாபிக்சல் அளவிலான மேக்ரோ லென்ஸ் ஆகியவைகள் உள்ளன.

செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளை கவனித்துக்கொள்ள முன்பக்கத்தில் ஒரு 20 மெகாபிக்சல் (எஃப் / 2.2) கேமரா உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சாருடன் வருகிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, இது டூயல் 4 ஜி வோல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ், க்ளோனாஸ், சாம்சங் பே, டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவைகளை ஆதரிக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்