ஆப்நகரம்

உலகின் முதல் மடிக்கும் ஸ்மார்ட்போன்; இன்னும் 2 மாதங்களில் டீசரை வெளியிடும் சாம்சங்!

சாம்சங் நிறுவனம் மடிக்கும் வகையிலான ஸ்மார்ட்போன் குறித்த அறிமுகத்தை வரும் நவம்பரில் வெளியிடுகிறது.

Samayam Tamil 4 Sep 2018, 10:26 pm
புதுடெல்லி: சாம்சங் நிறுவனம் மடிக்கும் வகையிலான ஸ்மார்ட்போன் குறித்த அறிமுகத்தை வரும் நவம்பரில் வெளியிடுகிறது.
Samayam Tamil Samsung


பல ஆண்டுகளாக சாம்சங் நிறுவனத்தின் மடிக்கும் வகையிலான ஸ்மார்ட்போன் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த 2 மாதங்களில் தனது தயாரிப்பு குறித்து டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக சாம்சங் மொபைல் சி.இ.ஓ டிஜே கோ கடந்த வாரம் பெர்லின் நகரில் பேசுகையில், நீண்ட காலத்திற்கு முன்பு உறுதியளித்த படைப்பை, வெளியிடும் நேரம் வந்துவிட்டது. வரும் நவம்பரில் சாம்சங் டெவலப்பர் கான்பெரன்சில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இருப்பினும் போன் எப்படி செயல்படும் என்று கூறவில்லை.

மேலும் பேசிய அவர், மடிக்கும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு பணிகள் மிகவும் கடினமானவை. இருந்த போதிலும், எங்கள் நிறுவனத்திற்கே உரிய தரம், மதிப்பு, செயல்பாட்டுடன் இருக்கும். ஒவ்வொரு சாதனமும், ஒவ்வொரு அம்சமும், ஒவ்வொரு உருவாக்கமும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த அர்த்தமுள்ளதாக இருக்கும்.

அவர்கள் பயன்படுத்தும் போது, அற்புதம்! இதற்காகத் தான் சாம்சங் தயாரிப்பை வாங்குகிறேன்! என்று கூற வேண்டும். புதிய தலைமுறை வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வண்ணம், ஸ்மார்ட்போன் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வரப்படும். மேலும் நடுத்தர விலை கொண்ட ஸ்மார்ட்போன்கள் இனி அடிக்கடி அறிமுகம் செய்யப்படும் என்று கூறினார்.

Samsung's foldable smartphone teased for November reveal.

அடுத்த செய்தி

டிரெண்டிங்