ஆப்நகரம்

வரும் 2022க்குள் 50% அணிகலன்களை குறிவைக்கும் ஸ்மார்ட்வாட்ச்!

ஸ்மார்ட்வாட்ச்களின் பயன்பாடு வரும் 2022க்குள் பெருமளவு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

Gadgets Now 15 Sep 2018, 6:49 pm
சென்னை: ஸ்மார்ட்வாட்ச்களின் பயன்பாடு வரும் 2022க்குள் பெருமளவு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
Samayam Tamil best-smartwatch


ஸ்மார்ட்வாட்ச்கள் பயன்படுத்துவதில் உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால், இவையெல்லாம் சிறிது காலம் மட்டுமே. சமீபத்தில் ஐடிசி ஆய்வறிக்கையின் படி, வரும் 2022க்குள் அணிகலன் சந்தையில் 50% அளவிற்கு ஸ்மார்ட்வாட்ச் பயன்பாடு இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு 38.9% அளவிற்கு இருந்த ஸ்மார்ட்வாட்ச் பயன்பாடு, நடப்பாண்டில் 46.2 மில்லியன் யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. இந்த எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு, 19.5% உயர்ந்து 94.3 மில்லியன் யூனிட்களாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

புதிய மாடல்கள் அறிமுகத்தின் மூலம், ஆப்பிள் வாட்ச் அணிகலன்களுக்கான சந்தையை தொடர்ந்து ஆக்கிரமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணிகலன் சந்தையில் ரிஸ்ட்பேண்ட்களின் முக்கியத்துவம் மிகப்பெரியதாக இருக்கிறது.

Smartwatches to rule nearly half of wearables by 2022.

அடுத்த செய்தி

டிரெண்டிங்