ஆப்நகரம்

காங்கிரஸ் பிரமுகரிடம் போலி பொருட்கள் விற்பனை! பிரபல நிறுவனம் மீது வழக்கு!!

பிரபல கம்பெனியின் பெயரில் போலியான பொருட்களை விற்பனை செய்ததாக ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Samayam Tamil 29 Jul 2019, 10:54 am
மகராஷ்டிராவில் காங்கிரஸ் பிரமுகரிடம் போலியான தயாரிப்புகளை விற்ற ஸ்னாப் டீல் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil snapdeal


அமேசான், பிளிப்கார்ட்டை அடுத்து ஆன்லைன் ஷாப்பிங்கில் முன்னனி நிறுவனமாக இருப்பது ஸ்னாப் டீல். அமேசானைப் போலவே இதிலும் அவ்வபோது ஆஃபர்கள், சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஸ்னாப் டீலில் போலியான பொருட்கள் விற்பனை செய்வதாக ராஜஸ்தான் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளரும், தொழிலதிபருமான இந்தர்மோகன் சிங் இந்த புகாரை அளித்துள்ளார்.

கடந்த ஜூலை 17ம் தேதி ‘Woodland’ நிறுவனத்தின் பெல்ட், வாலட் தயாரிப்புகளை ஸ்னாப் டீல் மூலம் இந்தர் மோகன் ஆர்டர் செய்துள்ளார். அவர் ஆர்டர் செய்தபடியே, வுட்லேண்ட் பெல்ட், வாலட் அவருடைய வீட்டுக்கு வந்தது. ஆனால், அதை பார்த்த உடனே தரம் குறைந்ததாக காணப்பட்டது.
இதையடுத்து சந்தேகம் அடைந்த இந்தர், அருகில் உள்ள வுட் லேண்ட் ஷோரூம்க்கு நேரில் சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் பெல்ட்டை காட்டியுள்ளார். அதை பரிசோதனை செய்த ஊழியர்கள், இது முற்றிலும் போலியானது என்று உறுதிபட தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த தொழிலதிபர் இந்தர் மோகன், நேராக காவல்நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின்படி, ஸ்னாப் டீல் நிறுவனத்தார் குனால் பஹ்ல், ரோஹித் பன்சால் ஆகியோ மீது இபிகோ 420 சட்டத்தின் கீழ் போலீசார் மோசடி வழக்குப் பதிவு செய்தனர்.

ஆன்லைனில் ஆஃபர் என்ற பெயரில் பிரபல நிறுவனங்களின் போலி தயாரிப்புகள் விற்கப்படுகிறது. அவற்றை வாங்கும் முன் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்