ஆப்நகரம்

இரண்டே மாதங்களில் டுவிட்டரில் 7கோடி கணக்குகள் முடக்கம்! - இதான் காரணம்

பொய்யான செய்திகளை பரப்புபவர்களை தடுக்கும் பொருட்டு கடந்த இரண்டு மாதங்களில் 7 கோடி டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

Samayam Tamil 8 Jul 2018, 10:31 am
பொய்யான செய்திகளை பரப்புபவர்களை தடுக்கும் பொருட்டு கடந்த இரண்டு மாதங்களில் 7 கோடி டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil Twitter


சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகள் பரப்பப்படுகின்றன, அதனால் பல்வேறு சமூக சீர்கேடுகளும், பிரச்னைகளும் ஏற்படுகின்றன. இதை தடுக்க சமூக வலைத்தளங்கள் எந்த அக்கறையும் காட்டாவில்லை என்ற புகார்கள் எழுந்தன . இதையடுத்து பொய்யான செய்திகளை பரப்புவதை தடுக்க சமூக வலைத்தளங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து போலியான, சமூக பிரச்னைகளை ஏற்படுத்தும் கருத்துக்களை தடுக்கும் வகையில், அதைப் பரப்பும் டுவிட்டர் கணக்குகளை கண்டறிந்து கடந்த மே, ஜூன் மாதங்களில் மட்டும் 70 மில்லியன் (7 கோடி) டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2017ம் வருடம் அக்டோபர் மாதம் முதல் இந்த நடவடிக்கையில் டுவிட்டர் நிறுவனம் இறங்கியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்