ஆப்நகரம்

சூரியனுக்கு வயசாயிருச்சு! அழியும் நாள் கணிப்பு

சூரியன் தனது ஆயுள் காலம் முடிந்து நெபுலா என்னும் ஒளிரும் புகைப்படலமாக மாறும் என்று மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

Samayam Tamil 8 May 2018, 6:21 pm
லண்டன்: சூரியன் தனது ஆயுள் காலம் முடிந்து நெபுலா என்னும் ஒளிரும் புகைப்படலமாக மாறும் என்று மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
Samayam Tamil 2000


இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சூரியனின் ஆயுள் காலம் எப்போது முடிகிறது என்றும் அதற்குப் பின் என்ன ஆகும் என்றும் ஆராய்ச்சி மூலம் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்.

சூரியன் விண்மீன்களில் சராசரி அளவும் ஆயுளும் கொண்டதாகும். இப்போது சூரியனுக்கு 5 பில்லியன் ஆண்டுகள் வயதாகிவிட்டது. இன்னும் 5 பில்லியன் ஆண்டுகளில் சூரியன் தன் ஆயுளை முடித்துக்கொண்டு, நெபுலா என்ற ஒளிரும் புகைப்படலமான மாறும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

“இன்னும் சுமார் 5 பில்லியன் ஆண்டுகள் கழித்து சூரியனின் எரிபொருளான ஹைட்ரஜன் அளவு மிகவும் குறைந்து அதன் மையம் குலையும். இதனால் வெளிப்பகுதியில் அணுசக்தி எதிர்வினை தூண்டப்பட்டு சூரியன் சிகப்பு நிறத்திற்கு மாறும். தொடர்ந்து அதன் எடை பாதியாகக் குறைந்து, மையத்திலிருந்து அகச்சிவப்புக் கதிர்களும் எக்ஸ்ரே கதிர்களும் அதிகமாக வெளிப்படும். அப்போது பிளாஸ்மா வளையம் ஒன்றும் அதைச்சுற்றிலும் உருவாகும். இது தூசு மற்றும் ஒளியின் கலவையாக இருக்கும். இதுதான் நெபுலா (Planetary nebula) என்று அழைக்கப்படுகிறது.

இந்த நெபுலாவை மேலும் 10,000 ஆண்டுகளுக்கு அருகில் உள்ள கேலக்ஸியிலிருந்து தொலை நோக்கி மூலம் பார்க்க முடியும். உதாரணமாக, தற்போதைய சூரியக் குடும்பத்திற்கு அருகில் (2 மில்லியன் ஒளி ஆண்டுகள்) இருக்கும் அந்திரொமேடா கேலக்ஸியில் இருந்து இந்த நெபுலாவைப் பார்க்கலாம்.” என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

நெபுலாவில் உள்ள வாயுக்கள் ஈர்ப்பினால் இணைந்து விண்மீன்கள் உருவாகும். மீதம் உள்ள தூசுப்படலம் விண்மீன்களின் ஈர்ப்பு விசையினால் ஒன்றிணைந்து கோள்களாக மாறும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்