ஆப்நகரம்

டாட்டா ஸ்கையில் புதிய ஆஃபர்!

டாட்டா ஸ்கையின் டி.டி.ஹெச் சேவையில் புதிதாக ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் ஆஃபர் பயன்பாடுகளைப் பற்றி இங்கு காணலாம்.

Samayam Tamil 1 Aug 2019, 10:49 am
டாட்டா ஸ்கையில் ஏற்கனவே உள்ள ஆஃபரில் சிறிது மாற்றம் செய்து புதிய ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil tata sky offer


இந்தியாவில் DTH சேவையில் டாட்டா ஸ்கை முன்னனி இடத்தில் உள்ளது. இதற்குப் போட்டியாக ஏர்டெல், டிஷ், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளது. இருப்பினும் மற்ற நிறுவனங்களை விட டாட்டா ஸ்கையில், அதன் ஒளிபரப்பு சேவை, பிக்சர் குவாலிட்டி சற்று தரம் வாய்ந்ததாக இருக்கிறது.

இந்த நிலையில், தற்போது டாட்டா ஸ்கையில் புதிய ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. 12 மாதத்திற்கு உண்டான கட்டணம் செலுத்தினால், கூடுதலாக 1 மாதத்திற்கான சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட முன்பே இருந்த ஆஃபர் தான். இதற்கு முன்பு 11 மாதங்களுக்கு கட்டணம் செலுத்தினால், 1 மாதம் கூடுதல் சேவை வழங்கப்பட்டு வந்தது. அதை இப்போது சற்று மாற்றி அமைத்துள்ளார்கள்.

12 மாதம் கட்டணம் என்பது வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் பேக்குகளைப் பொறுத்து மாறுபடும். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு, எந்த சேனல் வேண்டுமோ அதற்கு மட்டும் கட்டணம் செலுத்திக்கொள்ளலாம் என்ற முறை தான் தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. இருப்பினும் குறைந்தபட்ச கட்டண நிர்ணயம், சேவைக் கட்டணமும் வசூலிக்கப்படும்.

புதிய ஆஃபரில் வாடிக்கையாளர்கள் 12 மாதத்திற்கு கட்டணம் செலுத்தும் பட்சத்தில், அடுத்துள்ள 13வது மாதத்திற்கான கட்டணம் வாடிக்கையாளர்கள் அக்கவுண்டில் உடனடியாக சேர்ந்துவிடும்.
உதாரணத்திற்கு நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள பேக், சேனல்களின் 1 மாதக்கட்டணம் 300 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். இப்போது 12 மாதங்களுக்கு நீங்கள் ரீசார்ஜ் செய்தால், 12 x 300 = 3,600 ரூபாய் உங்களுடைய டாட்டா ஸ்கை கணக்கில் ஏறிவிடும். ரீசார்ஜ் செய்த அடுத்த 48 மணி நேரத்திற்குள், கூடுதலாக 1 மாதத்திற்கான கட்டணமும் ஏறிவிடும். இப்போது உங்களுடைய டாட்டா ஸ்கை கணக்கில் மொத்தம் 3,900 ரூபாய் இருக்கும்.


டாட்டா ஸ்கை HD மற்றும் SD ஆகிய இரு செட்டாப் பாக்ஸ் விலை 300 ரூபாய் வரையில் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை விபரங்களின்படி, SD செட்டாப் பாக்ஸ் 1,399 ரூபாய் என்றும், HD செட்டாப் பாக்ஸ் விலை 1,499 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SD, HD இரண்டுக்கும் வெறும் 100 ரூபாய் மட்டுமே வித்தியாசப்படுவதால், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் HD செட்டாப் பாக்ஸ் தேர்வு செய்ய விரும்புவார்கள். இதற்கு முன்பு கடந்த மாதம் இதே போன்று விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அப்போது SD 1,600 ரூபாய்க்கும், HD 1,800 ரூபாய்க்கும் விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்