ஆப்நகரம்

நிறைய ஏர்டெல் பயனர்களுக்கு தெரியாத 3 அன்லிமிடெட் கால்ஸ் & டேட்டா திட்டங்கள்!

அதிக அளவில் விளம்பரம் செய்யப்படாத மற்றும் நிறைய ஏர்டெல் பயனர்களுக்கு தெரியாத பாரதி ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் வரம்பற்ற அழைப்பு மற்றும் டேட்டா நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்!

Samayam Tamil 3 Jun 2020, 10:47 am
ஒவ்வொரு டெலிகாம் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களை நீண்ட காலத்திற்கு தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறது. அதனால்தான் அவர்கள் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறார்கள். ஏர்டெல் நிறுவனம் இதற்கு விதிவிலக்கு அல்ல.
Samayam Tamil Airtel Yearly Plans


நீண்ட காலத்திற்கு வரம்பற்ற அழைப்பு மற்றும் டேட்டா நன்மைகளை நீங்கள் விரும்பினால், ஏர்டெல் வழங்கும் ஆண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை நீங்கள் தேர்வு செய்யலாம். சிலர் இந்த வருடாந்திர திட்டங்களை மிகவும் விரும்புகிறார்கள், ஏனெனில் இது அவர்களின் எண்ணை மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்வதிலிருந்து காப்பாற்றுகிறது.

ஒரு BSNL சிம் வாங்க ரெடி பண்ணிட்டு.. அப்புறமா இந்த பிளான் பற்றி படிங்க!

தற்போது, ஏர்டெல் நிறுவனம் மூன்று வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. ஆனால் நினைவில் கொள்ளுங்கள், ஒவ்வொரு திட்டமும் வரம்பற்ற டேட்டா நன்மைகளுடன் வருவதில்லை. எதெல்லாம் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது? ஏர்டெல் வழங்கும் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை நிர்ணயம் என்ன? என்பதை பற்றியெல்லாம் விரிவாக அறிய தொடர்ந்து படிக்கவும்.

ஏர்டெல் ரூ.2498 ஆண்டு ப்ரீபெய்ட் திட்டம்:

‘ட்ரூலி அன்லிமிடெட்' ப்ரீபெய்ட் திட்டங்கள் என்ற பிரிவில் இது மிகச் சமீபத்திய சேர்க்கையாகும். ஏர்டெல் ரூ.2,498 வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலம் 2 ஜிபி டெய்லி டேட்டா பயன் கிடைக்கும். தினசரி டேட்டா தீர்ந்த பின்னர், அதை மீட்டமைக்க நள்ளிரவு வரை நீங்கள் காத்திருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களும் கிடைக்கும். உடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி முடியும் வரை வரம்பற்ற அழைப்பு வசதியைப் பெறுவீர்கள். இந்த திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும்.

டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு நன்மைகளை தவிர்த்து இந்த திட்டத்தின் கீழ் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளும் உள்ளன. ZEE5 பிரீமியம், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றின் இலவச சந்தாவையும் நீங்கள் பெறுவீர்கள். ஷா அகாடமியுடன் 28 நாட்களுக்கு இலவச ஆன்லைன் கோர்ஸை பெறுவீர்கள். மேலும் உங்கள் ஸ்மார்ட்போனில் ஆன்டி வைரஸ் பாதுகாப்பு மற்றும் இலவச ஹெலோட்டூன்களும் அணுக கிடைக்கும். மேலும் உங்கள் FASTag அக்கவுண்ட்டை ரீசார்ஜ் செய்வதின் வழியாக ரூ.150 என்கிற கேஷ்பேக்கையும் பெறலாம்.

ஏர்டெல் ரூ.2398 ஆண்டு ப்ரீபெய்ட் திட்டம்:

இது ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் மற்றொரு 365 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம் ஆகும். ஏர்டெல் ரூ.2,398 வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலம் 1.5 ஜிபி டெய்லி டேட்டா பயன் கிடைக்கும். தினசரி டேட்டா தீர்ந்த பின்னர், அதை மீட்டமைக்க நள்ளிரவு வரை நீங்கள் காத்திருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களும் கிடைக்கும். உடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி முடியும் வரை வரம்பற்ற அழைப்பு வசதியைப் பெறுவீர்கள். இந்த திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும்.

ஜியோ வழங்கும் 10GB இலவச டேட்டா; உடனே உங்க Jio App-குள்ள போங்க!

டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு நன்மைகளை தவிர்த்து இந்த திட்டத்தின் கீழ் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளும் உள்ளன. ZEE5 பிரீமியம், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றின் இலவச சந்தாவையும் நீங்கள் பெறுவீர்கள். ஷா அகாடமியுடன் 28 நாட்களுக்கு இலவச ஆன்லைன் கோர்ஸை பெறுவீர்கள். மேலும் உங்கள் ஸ்மார்ட்போனில் ஆன்டி வைரஸ் பாதுகாப்பு மற்றும் இலவச ஹெலோட்டூன்களும் அணுக கிடைக்கும். மேலும் உங்கள் FASTag அக்கவுண்ட்டை ரீசார்ஜ் செய்வதின் வழியாக ரூ.150 என்கிற கேஷ்பேக்கையும் பெறலாம்.

ஏர்டெல் ரூ.1,498 ஆண்டு ப்ரீபெய்ட் திட்டம்:

இந்தத் திட்டம் உங்களுக்கு கொஞ்சம் வித்தியாசமாகத் தோன்றலாம். இது ஏன் மலிவாக வருகிறது என்று நீங்கள் யோசிப்பீர்கள். காரணம், பிற வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களைப் போலல்லாமல், இது வரம்பற்ற தினசரி டேட்டா நன்மையுடன் வரவில்லை. இந்த திட்டத்தின் மூலம், உங்களுக்கு மொத்தமாகவே 24 ஜிபி அளவிலான டேட்டா மட்டுமே கிடைக்கும், மேலும் 3600 இலவச எஸ்எம்எஸ்கள் மட்டுமே அணுக கிடைக்கும். ஆனால் அழைப்பு வசதிகள் வரம்பற்றதாக இருக்கும். இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகள் மற்ற எல்லா திட்டங்களுக்கும் சமமானவை.

அதாவது இந்த திட்டத்தின் கீழ் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளும் உள்ளன. ZEE5 பிரீமியம், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றின் இலவச சந்தாவையும் நீங்கள் பெறுவீர்கள். ஷா அகாடமியுடன் 28 நாட்களுக்கு இலவச ஆன்லைன் கோர்ஸை பெறுவீர்கள். மேலும் உங்கள் ஸ்மார்ட்போனில் ஆன்டி வைரஸ் பாதுகாப்பு மற்றும் இலவச ஹெலோட்டூன்களும் அணுக கிடைக்கும். மேலும் உங்கள் FASTag அக்கவுண்ட்டை ரீசார்ஜ் செய்வதின் வழியாக ரூ.150 என்கிற கேஷ்பேக்கையும் பெறலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்