ஆப்நகரம்

TikTok-இல் புதிய கட்டுப்பாடு; இனிமேல் இஷ்டத்துக்கு "ஆட" முடியாது!

16 வயதுக்கு உட்பட பிள்ளைகளை கொண்ட பெற்றோர்களின் வயிற்றில் புளியை கரைக்கும் டிக்டாக் ஆப் ஆனது அதே பெற்றோர்களின் வயிற்றில் பாலை ஊற்றும் வண்ணம் ஒரு புதிய அம்சத்தினை அறிமுகம் செய்கிறது.

Samayam Tamil 18 Apr 2020, 9:45 am
டிக்டாக் நிறுவனம் பெற்றோர்களுக்காக ஒரு புதிய அம்சத்தை அதன் ஆப்பில் சேர்க்கிறது. இது அவர்களின் 16 வயதுக்கும் குறைவான குழந்தைகளின் அக்கவுண்ட்களை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், டைரக்ட் மெசேஜ்களை டிசேபிள் செய்யவும் அனுமதிக்கிறது.
Samayam Tamil TikTok Family Pairing Feature


மேலும் அவர்களின் கன்டென்ட் வியூவிங்கையும் (எதெல்லாம் பார்க்கலாம்) என்பதையும் கட்டுப்படுத்த உதவுகிறது. டிக்டாக் நிறுவனம் இந்த புதிய அம்சத்தினை பேமிலி பேரிங் (Family Pairing) என்று அழைக்கிறது.

மேலுமொரு WhatsApp அப்டேட்; இம்முறை Group call அம்சத்தில்!

இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் டிக்டாக் அக்கவுண்ட்டை தம்முடன் இணைக்கும் வாய்ப்பு கிடைக்கிறது, மேலும் இதன் வழியாக அவர்களது பிள்ளைகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் அனுமதிக்கிறது. இந்த அம்சம் வரும் வாரங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

13 வயதுக்கு மேற்பட்டவர்கள் கூட டிக்டாக்கில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்க அனுமதிக்கப்படுவதால் இந்த அம்சத்தை சேர்ப்பது டிக்டாக் தளத்திற்கு அவசியமாகிவிட்டது. இதனால்தான் 16 வயதிற்கு உட்பட்ட அனைத்து பயனர்களுக்கும் டைரக்ட் மெசேஜ் வருவதை தானாகவே டிசேபிள் செய்ய பைட் டான்ஸுக்கு சொந்தமான டிக்டாக் தளம் முடிவு செய்தது. இந்நிலைப்பாட்டில் மற்றொரு கட்டுப்பாடாக பேமிலி பேரிங் களமிறங்குகிறது.

இது தவிர்த்து டிக் டாக்கில் அணுக கிடைக்கும் ஸ்க்ரீன் டைம் மேனேஜ்மென்ட் வழியாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் டிக்டாக்கில் எவ்வளவு நேரம் செலவிட முடியும் என்பதைக் கட்டுப்படுத்த முடியும் என்று டிக்டாக் நிறுவனம் கூறியுள்ளது.

Zoom App எச்சரிக்கை: முடிந்தால் Uninstall செய்யவும் அல்லது "இதை" செய்யவும்!

மேலும் டிக்டாக்கின் ரெஸ்ட்ரிக்டட் மோட் வழியாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பொருந்தாத கன்டென்ட்டுகள் காட்சிப்படுவதை கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறுகிறது.

டைரக்ட் மெசேஜ் மீதான கட்டுப்பாடு தான் மிகவும் முக்கியம் என்றும், அது தான் இளம் குழந்தைகளை அந்நியர்களிடமிருந்து விலக்கி வைக்க உதவும் என்றும் டிக்டாக் பரிந்துரை செய்துள்ளது. "அங்கீகரிக்கப்பட்ட பின்தொடர்பவர்கள் மட்டுமே ஒருவருக்கொருவர் மெசேஜ் அனுப்ப முடியும், மேலும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை மெசேஜ் வழியாக அனுப்ப நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" என்றும் டிக்டாக் கூறியுள்ளது.

டிக்டாக் அனைத்து வயதினர் இடையேயும் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது, மேலும் இது கடந்த சில வாரங்களாக இந்தியாவில் மில்லியன் கணக்கானவர்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த புகழ் டிக்டாக்கிற்கு ஒரு "தலைவலியாக" மாறியுள்ளது. மேலும் இது உலகின் பல்வேறு பகுதிகளிலும் அதன் "உருவத்தை" மாற்றுவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்