ஆப்நகரம்

Google எச்சரிக்கை: நீங்களொரு NRI என்றால், உடனே இந்த ஆப்பை டெலிட் செய்யவும்!

NRI ஆக இருக்கும் மகக்ளின் மத்தியில் மோகவும் பிரபலமான Messaging App ஆன ToTok ஐ Google நிறுவனம் அதன் Play Store இல் இருந்து நீக்கியுள்ளது. ஏன்? எதற்காக என்கிற காரணம் உங்களை திடுக்கிட வைக்கும்!

Samayam Tamil 15 Feb 2020, 5:36 pm
வெகுஜன கண்காணிப்பு (mass surveillance) சார்ந்த உளவு வேலைகளில் பயன்படுத்தப்படுகிறது என்று இரண்டாவது முறையாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு ஆப்பை கூகுள் நிறுவனம் அதன் பைல் ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.
Samayam Tamil Google Remove ToTok


குறிப்பிட்ட ஆப்பின் மீதான குற்றசாட்டை வைத்தது - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம்; குறிப்பிட்ட ஆப்பின் பெயர் டோடாக் (ToTok) ஆகும்.

Thank you Google! ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்; இனிமேல் "அது" தேவையில்லை!

டோடாக் என்பது மிகவும் பிரபலமான ஒரு மெசேஜிங் ஆப் ஆகும். ஆப்பிள் நிறுவனம் அதன் ஆப் ஸ்டோரில் இருந்து இந்த ஆப்பை ஏற்கனவே நீக்கிவிட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

டோடாக் ஆப் ஆனது அது நிறுவப்படும் போனின் ஒவ்வொரு உரையாடல், இயக்கம், உறவு, நியமனம், ஒலி மற்றும் புகைப்படம் ஆகியவற்றை கண்காணிக்க பயன்படுத்தப்பட்டதாக 9to5Google தெரிவித்துள்ளது.


வகைப்படுத்தப்பட்ட உளவுத்துறை மதிப்பீட்டை (classified intelligence assessment) அறிந்த அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, சிக்னல் அல்லது டெலிகிராம் போன்றே வேலை செய்யும் இந்த ஆப்பை மத்திய கிழக்கு, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்களில் மில்லியன் கணக்கான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

Income Tax Warning: மார்ச் 31 க்குள் "இதை" செய்யவில்லை என்றால் உங்கள் PAN கார்டு BLOCK செய்யப்படும்!

ஆப் தரவரிசை மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஆப் அன்னி (App Annie) கருத்துப்படி, டோடாக் ஆப் தான் கடந்த வாரம் அமெரிக்காவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட சமூக பயன்பாடுகளில் ஒன்றாக உயர்ந்தது.

டோடாக் ஆப்பின் பின்னால் உள்ள நிறுவனம் ப்ரீஜ் ஹோல்டிங் (Breej Holding) என்று அறியப்படுகிறது, இது அபுதாபியை தளமாகக் கொண்ட இணைய நுண்ணறிவு மற்றும் ஹேக்கிங் நிறுவனமான டார்க்மேட்டருடன் (Dark Matter) உடன் இணைக்கப்பட்டுள்ளது.

சாத்தியமான சைபர் கிரைம்களுக்காக டார்க்மேட்டர் ஏற்கனவே எஃப்.பி.ஐ விசாரணையில் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்