ஆப்நகரம்

TRAI-இன் 4G டவுன்லோட் ஸ்பீட் டெஸ்ட்: யார் வின்னர்? ஏர்டெல்லா? ஜியோவா?

சமீபத்தில் வெளியான டிராய் மைஸ்பீட் போர்டல் அறிக்கையின்படி எது சிறந்த 4ஜி பதிவிறக்க வேகத்தை கொடுக்கிறது என்கிற உண்மை அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.

Samayam Tamil 17 Nov 2020, 1:11 pm
கடந்த அக்டோபர் மாதத்தில் சராசரியாக 17.8 எம்.பி.பி.எஸ் பதிவிறக்க வேகத்துடன், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 4ஜி பதிவிறக்க வேகத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதாக டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Samayam Tamil 4G Speed Test


Airtel, Vodafone பயனரா நீங்க? அப்போ மனச இரும்பாக்கிக்கோங்க! ஏனென்றால்?

இருப்பினும், கடந்த காலங்களில், அதாவது செப்டம்பர் 2020-இல் ஜியோவின் பதிவிறக்க வேகம் 19.1Mbps ஆக இருந்தது. தற்போது இது குறைந்துள்ளது, இருப்பினும் ஜியோ முதல் இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது.

Jio : இந்த 740GB பிளான் பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஜியோ நிறுவனத்திற்கு அடுத்ததாக நம்பமுடியாத வண்ணம் ஐடியா நிறுவனம் 9.1Mbps என்கிற வேகத்தை பதிவு செய்துள்ளது. இது TRAI இன் மைஸ்பீட் போர்ட்டலில் முன்பு பதிவுசெய்யப்பட்ட 8.6Mbps இலிருந்து 0.5Mbps அதிகமாகும், ஆக ஐடியா சேவையில் குறிப்பிடததக்க முன்னேற்றம் தெரிகிறது.

தொலைதொடர்பு ஒழுங்குமுறை அமைப்பு அதன் மைஸ்பீட் போர்ட்டலில் வோடபோன் மற்றும் ஐடியாவை இரண்டு தனித்தனி தொலைத் தொடர்பு நிறுவனங்களாகக் கணக்கிடுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

ரிலையன்ஸ் ஜியோ 4 ஜி பதிவிறக்க வேகத்தில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் போதும் கூட, மேலே குறிப்பிட்டுள்ளபடி இது கடந்த அக்டோபரில் பதிவு செய்த அதன் சராசரி பதிவிறக்க வேகத்தை விட 1.5 எம்.பி.பி.எஸ் "இழப்பை" கண்டுள்ளது.

TRAI-இன் மைஸ்பீட் போர்ட்டலின் கூற்றுப்படி, அக்டோபரில் 4 ஜி பதிவிறக்க வேகங்களின் பட்டியலில் வோடபோன் நிறுவனம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அது சராசரியாக 8.8Mbps என்கிற வேகத்தை பதிவு செய்துள்ளது. இது முன்னர் பதிவுசெய்யப்பட்ட 7.9Mbps இலிருந்து அதிகரித்துள்ளது.

கடைசியாக உள்ள பாரதி ஏர்டெல், தொடர்ச்சியாக இரண்டு மாதங்களாக சராசரியாக 7.5Mbps என்கிற பதிவிறக்க வேகத்தை பராமரித்து வருகிறது.

இதற்கிடையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அக்டோபர் இரண்டாவது காலாண்டில் அதன் வருவாயை அறிவிக்கும் போது, அது 40 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டுள்ளதாக வெளிப்படுத்தியது.

குறிப்பிடத்தக்க வகையில், ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் மற்ற நிறுவனங்களின், குறிப்பாக போட்டியாளரான வோடபோன் ஐடியவின் (VI) போஸ்ட்பெய்ட் சந்தாதாரர்களை தன்வசம் ஈர்க்கும் நோக்கத்தின் கீழ் புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இப்படியாக உலகளவில் ஒரே நாட்டில் 400 கோடி சந்தாதாரர்களைக் கடந்த முதல் நிறுவனம் என்கிற புகழை ஜியோ பெற்றுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவின் கூற்றுப்படி, அதன் தற்போதைய சந்தாதாரர்களின் எண்ணிக்கை 40.56 கோடியாக உள்ளது, மேலும் இது 2019 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் அறிவிக்கப்பட்ட 35.59 கோடியுடன் ஒப்பிடும் போது 13.96 சதவீத (YOY) வளர்ச்சி ஆகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்