ஆப்நகரம்

இனிமேல் கேப் டிரைவர்களால் நமது பெண்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது; உபெர் அதிரடி!

இந்த நடவடிக்கை மூலம் உபெர் தனது வாடிக்கையாளர்களின் நம்பிக்கை அதிகரிக்கும் என்று கூறுகிறது. உங்கள் கருத்து என்ன?

Samayam Tamil 28 Aug 2019, 1:04 pm
போக்குவரத்து சேவைகளை வழங்கும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான உபெர் அறிமுகம் செய்துள்ள சமீபத்திய அம்சம் ஆனது அதன் வாடிக்கையாளர்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பெண்களுக்கும், பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்கும். உபெர், அப்படி என்ன செய்தது?
Samayam Tamil Uber 24x7 Voice Based Helpline Launched In  India


உபெர் நிறுவனம் அதன் பாதுகாப்பு அம்சத்தையும், வாடிக்கையாளர் அனுபவத்தையும் மேலும் வலுப்படுத்தும் பொருட்டு, இந்தியாவில் அதன் 24x7 பாதுகாப்பு ஹெல்ப்லைனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஹெல்ப்லைனின் பயன் என்ன?

உங்களின் உபெர் பயணத்தின் போது, ஒருவேளை நீங்கள் ஏதேனும் பாதுகாப்பு சிக்கல்களை சந்திக்க நேரிட்டால், குறிப்பிட்ட ஹெல்ப்லைன் அம்சத்தினை பயன்படுத்தி, பயணத்தின் போதே நீங்கள் உபெர் வாடிக்கையாளர் ஆதரவு குழுவை அழைக்க முடியும்.

WhatsApp Update: சத்தம்போடாமல் 4 புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ள வாட்ஸ்ஆப்!

முன்னர் இருந்த எஸ்ஓஎஸ் பொத்தான் என்ன ஆனது?

இந்த பாதுகாப்பு அம்சமானது ஏற்கனவே உள்ள in-app SOS button உடன் சேர்க்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் SOS பொத்தான் ஆனது அவசர காலங்களில் சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் உபெர் ரைடர்களை இணைக்க உதவும் இரு அம்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் வாயிலாக, குரல் அடிப்படையிலான வாடிக்கையாளர் ஆதரவு ஹெல்ப்லைனை பெறும் உலகின் முதல் சில நாடுகளில் இந்தியாவும் இணைந்துள்ளது.



இந்த புதிய அம்சத்தின் வழியாக ஒரு உபெர் பயணத்தின் போது ஏற்படும் சக பயணிகளின் தவறான நடத்தை, ஓட்டுநர் உடனான தகராறு அல்லது அவசரகால பிரச்சினைகள் போன்றவைகள் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

Android Warning: இந்த ஆப்பை உடனடியாக UNINSTALL செய்யச்சொல்லி எச்சரிக்கை! ஏனென்றால்?

உயரும் உபெரின் பாதுகாப்பு தரம்!

உபெர் இந்தியா மற்றும் தெற்காசியாவின் மத்திய செயல்பாட்டு (ரைட்ஸ்) தலைவர் ஆன பவன் வைஷ் கூறுகையில், "எங்களுடன் நீங்கள் எவ்வாறு தொடர்பு கொள்ள விரும்புகிறீர்கள் என்பது குறித்த ரைடர்களிடமிருந்து பெறும் கருத்துக்களை ஒருங்கிணைப்பதன் மூலம், உபெர் அதன் பாதுகாப்பு தரத்தை எவ்வாறெல்லாம் உயர்த்தலாம் என்பதை தொடர்ந்து மதிப்பீடு செய்கிறது" என்று கூறியுள்ளார்.

முன் எப்போதும் இல்லாத அளவிலான பாதுகாப்பு!

"உபெரின் இந்த 24x7 பாதுகாப்பு ஹெல்ப்லைன் ஆனது முன்னெப்போதும் இல்லாத அளவிலான பாதுகாப்பை உறுதி செய்கிறது. எங்கள் ரைடர்ஸ் அனைவருக்கும் நாங்கள் வழங்கும் சேவைகளின் கீழ் பாதுகாப்பு கட்டமைக்கப்படுவதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம். குறிப்பாக இந்த கூடுதல் பாதுகாப்பு ஆனது இந்தியா முழுவதும் சிறந்த பாதுகாப்பு தரங்களை உருவாக்கும் என்று நம்புகிறோம்" என்று கூறியுள்ளார்.

1000GB Free Data: ஒரே அறிவிப்பில் அம்பானியின் ஜியோ ஃபைபரை தூக்கி சாப்பிட்ட ஏர்டெல்!

டிரைவரை பற்றிய பின்னணி சோதனை!

இது தவிர்த்து, உபெர் தனது பாதுகாப்பு நிலையை அதிகரிப்பதற்கான தொடர்ச்சியான செயல்முறைகளை நிகழ்த்தி வருகிறது. அதில் ஓட்டுநர்களுக்கு செல்ஃபீ வழியிலான அடையாள (ஐடி) சரிபார்ப்பு செயல்முறை ஆனது மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்த செயல்முறையின் கீழ் குறிப்பிட்ட டிரைவரின் பின்னணி சோதனைகளை டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின் வழியாக நிகழ்த்தலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்